சீமான் ஏன் எங்களை ஆதரிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும்.. அவரது பேச்சை சீரியஸாக்க வேண்டாம்.. அண்ணாமலை.!

Published : Sep 03, 2021, 05:26 PM IST
சீமான் ஏன் எங்களை ஆதரிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும்.. அவரது பேச்சை சீரியஸாக்க வேண்டாம்.. அண்ணாமலை.!

சுருக்கம்

சீமான் உலகத்தில் எங்குமே நடக்காததையா அவர் செய்துவிட்டார்? ஒருத்தருடைய அனுமதி இல்லாமல், படுக்கையறை, கழிவறையில் இருந்து வீடியோ எடுத்து வெளியிடுவதுதான் சமூக குற்றம். ஒருவருடைய தனிப்பட்ட வீடியோவை வெளியிட்டவர் மீதுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சீமானின் பேச்சை கேட்டு ரசிப்போம், அதனை சீரியஸாக எடுத்துக் கொள்ள தேவையில்லை என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பாஜகவின் முன்னாள் நிர்வாகி கே.டி.ராகவன் குறித்து சர்ச்சைக்குரிய பாலியல் வீடியோ ஒன்று சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த சீமான் உலகத்தில் எங்குமே நடக்காததையா அவர் செய்துவிட்டார்? ஒருத்தருடைய அனுமதி இல்லாமல், படுக்கையறை, கழிவறையில் இருந்து வீடியோ எடுத்து வெளியிடுவதுதான் சமூக குற்றம். ஒருவருடைய தனிப்பட்ட வீடியோவை வெளியிட்டவர் மீதுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சட்டப்பேரவையில் செல்போனில் ஆபாச படம் பார்ப்பது குற்றம். ஆனால், தனிப்பட்ட முறையில் ஒருவர் அவரது அறையில் இருப்பது எப்படி குற்றமாகும்? கேடுகெட்ட சமூகமாக நாம் மாறிவிட்டோமோ என்ற பயம்தான் வருகிறது.

யார் யாருடன் பேசுகிறார், செய்கிறார் என்பதை ஒட்டுக்கேட்டு வெளியிடுவதால் என்ன சாதிக்க முடியும்? என சீமான் கே.டி. ராகவனுக்கு ஆதரவு தெரிவித்து ஆவேசமாக பேசினார். சீமானின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி மற்றும் சில பெண்கள் அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். 

இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி சென்றார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- கோயில்கள் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு உள்ளிட்ட சில முக்கிய கோரிக்கைகளை எடுத்துசொல்லவே டெல்லி வந்ததாக கூறினார். சீமான் பேசுவதை எல்லாம் நான் சீரியஸாக எடுத்துக்கொள்ள மாட்டேன். அவரது பேச்சுக்களை எப்போதும் நகைச்சுவையாக எடுத்துக்கொள்வேன். சீமான் எதற்கு எங்களை ஆதரிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும் என அண்ணாமலை தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?