மத்திய அமைச்சர் பதவி வேண்டாம்... ஜகா வாங்கிய ஓ.பி.எஸ் மகன்..!

Published : Jun 01, 2019, 05:26 PM IST
மத்திய அமைச்சர் பதவி வேண்டாம்... ஜகா வாங்கிய ஓ.பி.எஸ் மகன்..!

சுருக்கம்

மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட தேனி தொகுதி எம்.பி., ஓ.பி.ரவிந்திரநாத் குமார் தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாக கூறியிருக்கிறார்.   

மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட தேனி தொகுதி எம்.பி., ஓ.பி.ரவிந்திரநாத் குமார் தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாக கூறியிருக்கிறார்.

 

பாஜக அரசின் அமைச்சரவையில் ரவீந்திர நாத் அமைச்சராக பேசி முடிக்கப்பட்டது என்றும் அவர் அமைச்சராவது உறுதி என்றும் கூறப்பட்டது. அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. இறுதி நேரத்தில் எடப்பாடி பழனிசாமி அணியினர் முட்டுக்கட்டை போட்டதே ரவிந்திரநாத்துக்கு அமைச்சர் பதவி கிடைக்காததற்கு காரணம் எனக் கூறப்பட்டு வந்தது. நேசமணியை தொடர்ந்து  இந்த விஷயம் தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.

 

இந்நிலையில் ஓ.பி.ஆர்.ரவிந்திர நாத் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ’’ஜெயலலிதா நமக்கு கற்றுக் கொடுத்த பாடம் மக்கள் பணி செய்வதே. அவ்வழியே என் பயணம். எனது வெற்றிக்கு அயராது உழைத்த அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு வாக்களைத்த மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதே என் கடமை. 

தலைமை எடுக்கும் முடிவு தான் இறுதியானது. ஆகவே தேவையற்ற கருத்துக்களை பதிவிடுவதை விடுத்து தாங்கள் இருக்கும் பகுதிகளில் உள்ள நிறை குறைகளை எனக்கு தெரியப்படுத்து மாறு கேட்டுக் கொள்கிறேன் ‘’ என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இதன் மூல தலைமைக்கு கட்டுப்பட்டு அமைச்சர் பதவி கேட்பதை அவர் நிறுத்திக் கொண்டுள்ளான் என அறிய முடிகிறது.  

PREV
click me!

Recommended Stories

ஓநாய்களிடம் சிறுபான்மையினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..! கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன இபிஎஸ்..!
125 நாள் வேலையை வரவேற்கிறோம்..! ஆனால்..? பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!