ஆவின் பால் விலை உயருகிறது..? அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடி தகவல்..!

By vinoth kumarFirst Published Jun 1, 2019, 5:17 PM IST
Highlights

தனியார் பால் விலையை தொடர்ந்து ஆவின் பால் விலையும் உயர வாய்ப்புள்ளது என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார். விரைவில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. 

தனியார் பால் விலையை தொடர்ந்து ஆவின் பால் விலையும் உயர வாய்ப்புள்ளது என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார். விரைவில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. 

உலக பால் தினத்தை முன்னிட்டு சென்னை நந்தனம் ஆவின் இல்லத்தில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அனைத்து பிரச்சனைகளிலும் திமுக இரட்டை வேடம் போடுகிறது. பால் கொள்முதல் விலையை உயர்த்துவது குறித்து பரிசீலித்து வருகிறோம். ஆவின் பால் விலையை உயர்த்துவது குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.

 

மேலும் பேசிய அவர் அதிமுகவில் கோஷ்டி பூசல் காரணமாகவே மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு அப்படி எல்லாம் இல்லை என்று பதிலளித்தார். அதிமுக குறித்து குறை கூற காங்கிரசுக்கு எந்த தகுதியிலும் இல்லை. அதிமுகவில் கோஷ்டி பூசல் போல் தெரியும் ஆனால், பிரச்சனை என்று வந்துவிட்டால் அனைவரும் ஒன்றாகி விடுவோம். உள்ளாட்சி தேர்தல் கூட்டணி தொடர்பாக முதல்வர் மற்றும் துணை முதல்வவர் முடிவு எடுப்பார்கள் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். 

click me!