89ல் இருந்து பல தேர்தல்களை சந்தித்தவர் சின்னம்மா... செமயா சமாளிக்கும் தினகரனின்

By sathish kFirst Published Jun 1, 2019, 5:24 PM IST
Highlights

 89ல் இருந்து பல தேர்தல்களை சந்தித்தவர்., சின்னம்மா இந்த தேர்தலில் நமக்கு வெற்றிக்கிடைக்கவில்லை என்பதால் மனம் தளராமல் எல்லோரும் ஒற்றுமையாக சரியாக செயல்பட சொல்லுமாறு கூறினார்.
 

89ல் இருந்து பல தேர்தல்களை சந்தித்தவர்., சின்னம்மா இந்த தேர்தலில் நமக்கு வெற்றிக்கிடைக்கவில்லை என்பதால் மனம் தளராமல் எல்லோரும் ஒற்றுமையாக சரியாக செயல்பட சொல்லுமாறு கூறினார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை அசோக் நகரில் உள்ள தலைமை கழகத்தில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமை வகித்தார். வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன், பழனியப்பன், உள்ளிட்ட  முக்கிய நிர்வாகிகள்  கலந்து கொண்டனர். 

இந்த கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய  தினகரன்;  நாங்கள் வெற்றியை எதிர்பார்த்தோம். கிடைக்கவில்லை. அதனால் அரசியல் கட்சியை வைத்துக்கொண்டு வீட்டிலேயே முடங்கி கிடக்க முடியுமா? தேர்தல் முடிவுக்குப் பின்னர் 3 நாள் கழித்தவுடனேயே பத்திரிகையாளர்களை சந்தித்தோம். அந்த அளவுதான் தேர்தல் முடிவுகள் எங்களை பாதித்தது. நாங்கள் வெற்றியை எதிர்பார்த்தது உண்மை. அதே நேரத்தில் மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம்.  

வேலூர் பாராளுமன்றத் தேர்தல், நாங்குனேரி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் குறித்து பேசினோம். நாங்குனேரி வேட்பாளர் குறித்து முடிவு எடுக்கவில்லை. வேலூர் பாராளுமன்றத் தொகுதி வேட்பாளர் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பாண்டுரெங்கன்தான் எனப் பேசிய அவர், தேர்தல் முடிவுக்கு பிறகு நான் சசிகலாவை சந்திக்கும் முன்பே அவர் டிவியில் தேர்தல் முடிவுகளை பார்த்து தெரிந்துகொண்டார். இந்த தேர்தலில் நமக்கு வெற்றிக்கிடைக்கவில்லை என்பதால் மனம் தளராமல் எல்லோரும் ஒற்றுமையாக சரியாக செயல்பட சொல்லுமாறு கூறினார். 89ல் இருந்து பல தேர்தல்களை சந்தித்தவர் எனக் கூறினார். 

click me!