'சொடக்கு மேல சொடக்கு' பாட்டு போடமாட்டியா? பஸ் கண்ணாடியை உடைத்த சூர்யா ரசிகர்கள்... ஓட்டுநருக்கும் நடத்துநருக்கு செம காட்டு...

 
Published : Feb 09, 2018, 11:50 AM ISTUpdated : Sep 19, 2018, 01:56 AM IST
'சொடக்கு மேல சொடக்கு' பாட்டு போடமாட்டியா? பஸ் கண்ணாடியை உடைத்த சூர்யா ரசிகர்கள்... ஓட்டுநருக்கும் நடத்துநருக்கு செம காட்டு...

சுருக்கம்

Do not playing Sodakku Mele Sodakku Surya fans who broke bus specs

'சொடக்கு மேல சொடக்கு' பாடலை போடாததால் பஸ் கண்ணாடியை உடைத்து, ஓட்டுநரையும் நடத்துநரையும் தாக்கிய சூர்யா ரசிகர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சூர்யா நடிப்பில் பொங்கலுக்கு ரிலீசான 'தானா சேர்ந்த கூட்டம்' படம் வசூல் ரீதியாக சொதப்பினாலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இந்தப்படம் வெளியாகி ஒருமாதம் ஆகும் நிலையில், விருதுநகர் மொட்டமலை என்ற பகுதியில் இருக்கும் ஒரு தனியார் கல்லூரியில் படிக்கும் சில மாணவர்கள் சிலர் சூரியா ரசிகர்கள் இவர்கள் தங்கள் கிராமங்களில் இருந்து ஒரு தனியார் பேருந்தில் தினமும் கல்லூரிக்கு பயணம் செய்வது வழக்கம்.

இந்நிலையில், கல்லூரிக்கு பேருந்தில் பயணம் செய்த சூர்யா ரசிகர்கள் சிலர் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் வரும் "சொடக்கு மேல சொடக்கு போடுது" பாடலை போடும்படி பேருந்து நடத்துனரிடம் கேட்டுள்ளனர்.

அந்தப் பாடலைப் போட ஓட்டுநர் மறுத்துள்ளார். காரணம் அந்த பாடல் தங்களிடம் இல்லை என மாணவர்களிடம் கூறியிருக்கிறார். இதனால் டென்ஷனான மாணவர்கள்  , பஸ் கண்ணாடியை உடைத்துள்ளனர். ஓட்டுநர் மற்றும் நடத்துனரும் சூர்யா ரசிகர்களால் சரமாரியாக தாக்கப்பட்டுள்ளனர். கல்லூரி மாணவர்களான அவர்கள் இந்த செயலில் ஈடுபட்டது பற்றி தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் விறுவிறுப்பாக விரைந்து வைரலாகிறது.

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!