சட்டு புட்டுன்னு முடிவெடுக்காதீங்க...! சருக்கி விழுந்துடுவீங்க...! கமலுக்கு அட்வைஸ் செய்யும் 'குடி'மகன்கள்!

 
Published : Nov 07, 2017, 04:46 PM ISTUpdated : Sep 19, 2018, 01:24 AM IST
சட்டு புட்டுன்னு முடிவெடுக்காதீங்க...! சருக்கி விழுந்துடுவீங்க...! கமலுக்கு அட்வைஸ் செய்யும் 'குடி'மகன்கள்!

சுருக்கம்

Do not make any decision hastily

கமல் அவசரப்பட்டு எந்த முடிவும் பண்ணாதீங்க... சரக்கடிக்காமல் சமாதானத்துக்கு வந்தப்புறம் முடிவு பண்ணுங்க என்று நடிகர் கமலின் அரசியல் பிரவேசம் குறித்து தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் கிண்டல் செய்யும் விதமாக போஸ்டர் அடித்துள்ளது.

கமலின் 63-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களை சந்தித்தார் கமல். அப்போது பேசிய அவர், தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று கூறினார். அதற்கான முன்னோட்டமாக “மையம் விசில்” என்ற செயலியை அறிமுகப்படுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு கமல் பதிலளித்தார். அப்போது, ஊழல்வாதிகளுக்கும் தவறானவர்களுக்கும் தன் இயக்கத்தில் இடமில்லை எனவும் அப்படியானவர்கள் தன் இயக்கத்தில் இருந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

இந்த நிலையில், கமலின் அரசியல் பிரவேசம் குறித்து, தமிழ்நாடு மதுகுடிப்போம் விழிப்புணர்வு சங்கம் வித்தியாசமான ஒரு அறிவுரையைக் கூறியுள்ளது. இது குறித்து போஸ்டர் ஒன்றையும் அச்சடித்துள்ளது.

மது குடிப்பவர்களுக்கு தனி உரிமையும், நிறைய சலுகைகளையும் ஏற்படுத்தும் வண்ணம் தமிர்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் இயங்கி வருகிறது. இந்த சங்கம் மதுவுக்கு எதிராகவும் பேசி வருகிறது. 

இந்த நிலையில், மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் சார்பில், நடிகர் கமல்ஹாசனுக்கு வித்தியாசமான போஸ்டர் ஒன்றை அடித்து இருக்கிறது. அந்த போஸ்டரில், கமலின் அரசியல் பிரவேச அறிவிப்பை கிண்டல் செய்யும் விதமாக அதில் அச்சிடப்பட்டுள்ளது. போஸ்டரில், பிக் பாஸ் சகலகலா வல்லவரே!  ''சரக்கடிப்போர் 61.4 சதவிகிதம் இருக்கோம். சட்டுபுட்டுன்னு முடிவெடுக்காதீங்க.. சருக்கி விழுந்துடுவீங்க... சரக்கடிக்காமல் சமாதானத்துக்கு வாங்க... சரியான முடிவு சொல்றோம் 61.4%  என்று அச்சிடப்பட்டுள்ளது.

நடிகர் கமல் ஹாசன், சென்னை, தி.நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் தனது அரசியல் பிரவேசம் குறித்து பேசியிருந்தார். கமலின் அறிவிப்பை கிண்டல் செய்யும் விதமாக இந்த போஸ்டரில் அச்சிடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த போஸ்டரில் இடம் பெறும் வசனம் தற்போது வைரலாகி வருகிறது.

PREV
click me!

Recommended Stories

கொளுத்திப் போட்ட எடப்பாடி..! கொந்தளித்த பிரேமலதா-டிடிவி, ஓபிஎஸ்..! ஆப்பு வைத்த வியூக வகுப்பாளர்கள்..!
திமுக அரசு அலட்சியத்தால் 9 பேர் பலி.. 'அந்த' நிதி எங்கே?.. கொந்தளித்த அண்ணாமலை!