கண்ணு கலங்காதீங்கய்யா... ஓடிவர நாங்க இருக்கிறோம்... பாமக ராமதாஸ் ஆறுதல்..!

By Thiraviaraj RMFirst Published Apr 14, 2020, 12:24 PM IST
Highlights
ஒரு வீட்டில் அடுப்பெரிந்தால் மறுவீட்டில் பசியில்லையே... ஒரு கண்ணு கலங்கி நிறைந்தால் ஓடி வரப் பலருண்டங்கே!
சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால், இனி மக்கள் முகக் கவசம் அணிவதைக் கட்டாயமாக்கி உள்ளது. 

கொரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்க பொது மக்கள் வெளியே செல்லும் பொழுது கட்டாயமாக முகக் கவசம் அணிய வேண்டும் என்று தொற்று நோய் தடுப்பு மற்றும் பொதுச் சுகாதார சட்டங்களின் அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

அவ்வாறு அணியத் தவறினால், அவர்களின் அவசரகால போக்குவரத்து அனுமதிச் சீட்டு ரத்து செய்யப்படுவதோடு, மூன்று மாதங்களுக்கு அவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும். இத்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. 

இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’பாட்டாளி மக்கள் கட்சி அறிவுறுத்தியவாறு சென்னை, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை அனைவரும் மதித்து நடக்க வேண்டும்; தமிழ்நாடு முழுவதும் இது நீட்டிக்கப்பட வேண்டும்.

ஒரு வீட்டில் அடுப்பெரிந்தால் மறுவீட்டில் பசியில்லையே
ஒரு கண்ணு கலங்கி நிறைந்தால் ஓடி வரப் பலருண்டங்கே!
- முகத் வேம்பயம், மலையாளக் கவிஞர்.

— Dr S RAMADOSS (@drramadoss)


ஒரு வீட்டில் அடுப்பெரிந்தால் மறுவீட்டில் பசியில்லையே... ஒரு கண்ணு கலங்கி நிறைந்தால் ஓடி வரப் பலருண்டங்கே!’’ என மலையாளக் கவிஞர், முகத் வேம்பயம் கவிதையையும் குறிப்பிட்டுள்ளார்.
click me!