
தூத்துக்குடி கலவரம் குறித்து விசாரிக்க்க உள்ள ஒரு மேன் கமிஷன் மீது நம்பிக்கை இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
துப்பாக்கி சூட்டில் காயமுற்றவர்களை சந்திக்க நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி சென்றார். போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலத்த காயமடைந்து
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். உயிரிழந்தவர்களின் வீட்டுக்கு ரஜினி செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, அவர் தங்கியிருந்த ஓட்டலுக்கு உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரை வரவழைத்து ஆறுதல் கூறினார்.
இதனைத் தொடர்ந்து ரஜினி, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தூத்துக்குடி போராட்டத்தின்போது நடந்த வன்முறைக்கு காரணம் சில சமூக விரோதிகள்தான் என்றார்.
துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழக அரசை ராஜினாமா செய்ய வேண்டும் என்பது பற்றி... உங்களது கருத்து என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, எல்லாவற்றுக்கும் ராஜினாமா என்றால் எப்படி. இனிமேல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றார். தூத்துக்குடி கலவரம் பற்றி ஒரு நபர் கமிஷன் மேல் நம்பிக்கை இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.