விஷமிகள் புகுந்திருக்காங்க… போலிஸ்காரர்களை அடிச்சிருக்காங்க… பஞ்ச் மேல் பஞ்ச் வைத்த ரஜினி

 
Published : May 30, 2018, 01:24 PM ISTUpdated : Sep 19, 2018, 02:27 AM IST
விஷமிகள் புகுந்திருக்காங்க… போலிஸ்காரர்களை அடிச்சிருக்காங்க… பஞ்ச் மேல் பஞ்ச் வைத்த ரஜினி

சுருக்கம்

rajinikanth thoothukudi trip press meet

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூற தூத்துக்குடி செல்கிறேன். நடிகர் என்பதால் என்னை பார்த்தால் இந்த சூழலில் தூத்துக்குடி மக்கள் சந்தோஷமாக இருப்பார்கள் என்று கூறியுள்ளார். சட்டப்பேரவையை திமுக புறக்கணித்தது குறித்து கருத்து கூற விரும்பவில்லை எனக்கூறினார். தற்போது நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வருவதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள்  அவருக்கு வரவேற்பளித்தனர்.

காயமடைந்தவர்களில் மூன்று பேருக்கு தலா ரூ.10000 நிதி உதவி அளிக்கியுள்ளார். இறந்தவர்களின் வீடுகளுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தான் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு வரவழைத்து அவர்களை  சந்தித்து ஆறுதல் கூறுவார் எனத் தெரிகிறது.

காயமுற்றவர்களை சந்தித்த பின் பத்திரிக்கையாளர்களை சந்தித்த ரஜினிகாந்த்

13 பேர் இறப்புக்கு பின்  ஸ்டெர்லைட் தரப்பு நீதிமன்றம் சென்றால் அது மனிதாபமனமற்ற செயல் மக்கள்சக்திதான் வெல்லும் நீதிமன்றத்திற்கு சென்றாலும் ஸ்டெர்லைட் தரப்பு ஜெயிக்காது எனக் கூறினார் தமிழக புலனாய்வு துறை தவறால்தான் வன்முறை நிகழ்ந்துள்ளது. தமிழகம் போராட்ட பூமியாக மாறக்கூடாது.

காவல்துறையினரை தாக்கியவர்களை கடுமையாக தண்டிக்கவேண்டும். அவர்களின் புகைப்படத்தை பேப்பர் மற்றும் டிவி சேனல்களில் வெளியிட வேண்டும் எனக் கூறினார். நாட்டில் உள்ள எல்லா மக்களுக்கும் தனித்தனி போலீஸா போடமுடியும் காவல்துறையினர் மீது தாக்குபவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டுமென காட்டமாக பதில் சொன்னார் ரஜினி

எல்லாத்துக்கும்  ராஜினாமா என்பதை ஏற்க முடியாது. பிரச்சனைக்கு தீர்வுகாண போராட்டம் மட்டும் வழிகிடையாது எனக்கூறியுள்ளார். விஷமிகள் புகுந்து நாசக்கார வேலைகளை செய்துள்ளனர். சமூக விரோதிகள் போராட்டத்தின் உள்ளே நுழைந்தனர் என பாதிக்கப்பட்ட மக்கள் கூறியுள்ளனர் எனத் தெரிவித்தனர்.

சமூக விரோதிகளை முன்னால் முதல்வர் ஜெயலலிதா இரும்புக்கரம் கொண்டு அடக்கினார். அதனை இந்த அரசு செய்ய தவறிவிட்டது. சமூகவிரோதிகளை இரும்புகரம் கொண்டு அடக்கவேண்டும் அடக்கவில்லையென்றால் தமிழகத்திற்கே ஆபத்து என்றும் கூறினார்  ஜல்லிக்கட்டு போராட்டத்தைப் போலவே இந்த போராட்டமும் ரத்தத்தில் முடிந்துள்ளது என தன் வருத்தத்தை தெரிவித்துள்ளார். ஒன்மேன் கமிஷன் மீது நம்பிக்கை யில்லை எனவும் தெரிவித்தார்

PREV
click me!

Recommended Stories

திமுகவும், ஃபெவிக்கால் ஃபிரண்ட்ஷிபும்..! கவர்ண்மென்ட் நடத்துறீங்களா? கண்காட்சி நடத்துறீங்களா..? பங்கம் செய்த விஜய்..!
பெரியாரும், அண்ணாவும், எம்.ஜிஆரும் தமிழ்நாட்டின் சொத்து... நீங்க மட்டும்தான் சொந்தம் கொண்டாடணுமா..? ஆத்திரப்படும் விஜய்..!