"do and die" ஸ்டாலின் கூறிய ஒற்றை வார்த்தை.. சமூக வலைதளத்தில் செம்ம வைரஸ்..

By Ezhilarasan BabuFirst Published Dec 20, 2021, 1:12 PM IST
Highlights

பலர் சொல்வார்கள் " செய் அல்லது செத்துமடி" என்பார்கள் ஆனால் எதையும் செய்து முடித்துவிட்டுதான் மடிய வேண்டும் என்ற எண்ணத்தில் நான் கடமையாற்றி கொண்டிருக்கிறேன். ஆங்கிலத்தில் பழமொழி இருக்கிறது " do or die"  என்னைப் பொறுத்தவரையில் " do and die" என்றுதான் நான் எடுத்துக் கொள்வேன்.  செய்துவிட்டு செத்துமடி என்றுதான் சொல்வேன், 

செய் அல்லது செத்து மடி என்பார்கள் ஆனால் எத்னையும் செய்து முடித்துவிட்டு தான் மடியவேண்டும் என்ற லட்சியத்துடன் பணியாற்றி வருபவன் நான் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறிய புதுமொழி சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டாகி வருகிறது. பலரும் இதை ஆதரித்தும் விமர்சித்தும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்திய சுதந்திர போராட்டத்தின் போது நாட்டு மக்களைத் தட்டி எழுப்ப மகாத்மா காந்தி முழங்கிய மந்திரச் சொல்தான் "செய் அல்லது செத்துமடி" ...  இயலாமையில் துவண்டு போகிறவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வார்த்தைகளாக இது இருந்து வருகிறது. தற்போது இந்தச் சொல் உச்சரிக்கப்படாத மேடைகளே இல்லை என்று சொல்லலாம். அந்தளவுக்கு நம்பிக்கையூட்டும் முது மொழியாக இருந்து வருகிறது இந்த சொல். ஆனால்  இந்தச் சொல்லை மாற்றி "செய் அல்லது செத்து மடி" அல்ல "செய்துவிட்டு மடி" என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் புது முழக்கத்தை முன் வைத்திருக்கிறார். இது பெரும் வரவேற்பை பெற்றுள்ள அதே நேரத்தில் சமூக வலைதளத்தில் விவாதப் பொருளாகவும் மாறியுள்ளது.

பத்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திமுக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு அதிரடி திட்டங்களை அரசு அறிவித்து வருகிறது. கொரோனா நோய்த் தொற்று காலத்தில் ஸ்டாலின் தலைமையிலான அரசு செயல்பட்ட விதம் மக்கள் மத்தியில் இன்றும் பாராட்டப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் மழை  வெள்ளத்தின் போது பணிகள் துரிதப்படுத்தப்பட வில்லை என்ற விமர்சனமும் அரசு மீது இருந்து வருகிறது. ஆனால் அரசு கொண்டு வரும் பெரும்பாலான திட்டங்கள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகிறது. தனிப்பட்ட முறையில் முதல்வர் ஸ்டாலின் கடுமையான உழைப்பாளி என்றும் மக்கள் அவரை வாழ்த்தி வரவேற்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று சென்னை மாதவரத்தில் நடந்த அரசு ஊழியர்கள் சங்கத்தின் 14வது மாநில மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சி அமைத்த போதெல்லாம் அரசு ஊழியர்களுக்கு துணையாக நின்றிருக்கிறது. தற்போது ஆட்சிக்கு வந்த ஆறு மாதங்களில் அரசு ஊழியர்களுக்கு தேவையான ஏராளமான திட்டங்களை நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

அரசு பணியாளர்கள், பதவி உயர்வு பெறும் அரசு ஊழியர்கள் அந்தந்த மாவட்டங்களிலேயே பயிற்சி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு கடுமையான நிதி நெருக்கடியில் இருந்த போதிலும் அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே ஜனவரி 1-ஆம் தேதி முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என அறிவித்தார். கடந்த ஆட்சி காலத்தில் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது அவர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ரத்து செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் கூறினார். மொத்தத்தில் நான் வெறும் முதல்வராக இல்லை நான் உங்களில் ஒருவனாக இருக்பேன். நீங்கள் அரசு ஊழியர்கள் நான் மக்கள் ஊழியர் நம் இருவருக்கும் இடையே உள்ள வேறுபாடு இதுதான். மொத்தத்தில் நான் அதிகம் பேசமாட்டேன் நான் செயலில் காட்டுவேன்,

பலர் சொல்வார்கள் " செய் அல்லது செத்துமடி" என்பார்கள் ஆனால் எதையும் செய்து முடித்துவிட்டுதான் மடிய வேண்டும் என்ற எண்ணத்தில் நான் கடமையாற்றி கொண்டிருக்கிறேன். ஆங்கிலத்தில் பழமொழி இருக்கிறது " do or die"  என்னைப் பொறுத்தவரையில் " do and die" என்றுதான் நான் எடுத்துக் கொள்வேன்.  செய்துவிட்டு செத்துமடி என்றுதான் சொல்வேன், அரசு  ஊழியர்களின் குடும்பத்திற்கு கருனை நிதி வழங்கியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தான், அரசு ஊழியர்கள் இன்றி அரசாங்கமே இல்லை, அரசு ஊழியர்களுக்கு அதிக சலுகை வழங்கியது திமுக அரசுதான் இவ்வாறு அவர் பேசினார். அவர் பேசிய " do and die"  என்ற அவரது புதுமொழியை பலரும் பாராட்டி வருகின்றனர். சமூக வலைதளத்தில் இது அதிகம் ட்ரெண்டாகி வருகிறது. முதல்வர் ஸ்டாலின் கூறிய புது மொழியான 

" do and die" என்ற வார்த்தை  ஹேஸ்டேக் ட்விட்டரில் வைரலாகி வருகிறது. அவரின் இந்த வார்த்தையை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். அதில் திமுகவின் சாதனைகளை பட்டியலிட்ட இணையதள வாசிகள் சிலர், முதல்வர் மிகச் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் அவர் மிகக் கடுமையாக உழைப்பவர், அந்த அடிப்படையில் இந்த வார்த்தையை அவர் சொல்லியிருக்கிறார், இது மிகவும் பாராட்டத்தக்கது, வரவேற்கக் கூடியது என பதிவிட்டுள்ளனர். அதில் ஒரு இணையதளவாசி தனது டுவிட்டரில், முதல்வரின் புது மொழியை மேற்கோள்காட்டி பதிவு செய்துள்ளார் அதில்,  "செய்.. செய்துவிட்டு மடி" இதில் தலைவர் ஸ்டாலின் சொல்லியதன் விளக்கம் "செய்... செய்துகொண்டே வாழ்"  இலக்கை எட்டு சாகாதே.. இதை தான் நம் தலைவர் " do or die" க்கு மேட்சாக " do and die" என்று சொல்லியுள்ளார். 

" do or die" செய் அல்லது செத்துமடி என்பது பாதுகாப்புத் துறையினருக்கு பொருத்தம் என்று கூறியுள்ளார். ஆனால் இன்று முதல்வர் கூறிய  " do and die" என்ற இந்த வார்த்தை  சுனாமி போன்றது. அனைவருக்கும் ஊக்கம் அளிக்க கூடியது என்றும் சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர். அதே நேரத்தில் இதற்கு எதிர் கருத்துக்களும் சமூகவலைதளத்தில் எழுந்துள்ளது.  " do and die" என்பது சரியே, செய்துவிட்டு செய்த காரியத்தை வெற்றியடையச் செய்து விட்டு இறக்க வேண்டிய அவசியம் என்ன? என்று பலர் கேள்விகளை முன் வைத்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மொத்தத்தில் ஸ்டாலின் அவர்கள் கூறிய வார்த்தை சமூக வலைத்தளத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

click me!