தேர்தல் பிரச்சாரத்தில் அப்ளாஸ் அள்ளும் உதய்..!! இது வெறும் டிரைலர் தான் மெயின் பிக்சர் பின்னாடி தெரியும் என பொறிகிளப்பும் அதிரடி.!!

By Ezhilarasan BabuFirst Published Oct 15, 2019, 12:17 PM IST
Highlights

தற்போது நடைபெறும் இந்த இடைத்தேர்தல்  2021 ஆம் ஆண்டு வர உள்ள சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான  ட்ரெய்லர் படம்  என்று குறிப்பிட்ட அவர்,   நிச்சயம் இந்த இடைதேர்தலில் திமுக வெல்லும் என்றார்.  வரும்  2021ல் திமுக சட்டமன்ற தேர்தலில் அதிகப்படியான தொகுதிகளில் வெற்றிபெற்று  திமுக ஆட்சி அமைக்கும் என்றும் 
 அப்போது அவர் கூறினார்.

2021 சட்டமன்ற  தேர்தலுக்கான ட்ரெய்லர் படம்தான் விக்ரவாண்டி, நாங்குநேரி, சட்டமன்ற இடைத்தேர்தல் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எதிர் வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்ற பெற்று திமுக ஆட்சி அமைக்கும் என்றும் அப்போது அவர் கூறினார். 

இப்போதெல்லாம் திமுகவின் தேர்தல் பிரச்சாரங்கள்  என்றால்,  அக்கட்சியின் முன்னணித்  தலைவர்களையும் கடந்து,  அதில் உள்ள பேச்சாளர்களையெல்லாம் தாண்டி, உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்தான் கலைகட்டிவருகிறது. அவரின் எதார்த்தமான பேச்சு திமுக இளைஞர்களை ஈர்த்து வருவதுதான் அதற்கு காரணம்.  கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நட்சத்திர பேச்சாளர்களையெல்லாம் தாண்டி அவர் சிறப்பாக செயல்பட்டார் என்பதற்காகவும் அவரின்  பேச்சு வெற்றிக்கு உதவியது என்ற காரணத்தினால்தான் அவருக்கு  திமுக இளைஞரணி செயலாளர் பதவியே கொடுக்கப்பட்டது. 

இந்நிலையில் விக்ரவாண்டி  சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட  பகுதிகளில் அவர் தேர்தல் பிரச்சாரத்தில்  ஈடுபட்டு வருகிறார்.  இந்நிலையில் அத்தொகுதியில் திண்ணை பிரச்சாரத்தை மேற்கொண்ட அவர்,  மக்களின் பிரச்சனைகளை நேரில் கேட்டறிந்தார்.  100 நாள் வேலை திட்டத்தை அரசு முறையாக செயல்படுத்தவில்லை என அப்போது அவர் குற்றம்சாட்டினார்.  திமுக ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலை திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும்,  100 நாள் வேலைத்திட்டத்தை  109 நாட்களாக  உயர்த்துவோம் எனவும் அவர் வாக்குறுதியளித்தார்.

 

தற்போது நடைபெறும் இந்த இடைத்தேர்தல்  2021 ஆம் ஆண்டு வர உள்ள சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான  ட்ரெய்லர் படம்  என்று குறிப்பிட்ட அவர்,   நிச்சயம் இந்த இடைதேர்தலில் திமுக வெல்லும் என்றார்.  வரும்  2021ல் திமுக சட்டமன்ற தேர்தலில் அதிகப்படியான தொகுதிகளில் வெற்றிபெற்று  திமுக ஆட்சி அமைக்கும் என்றும்  அப்போது அவர் கூறினார்.  அப்போது  முன்னாள் அமைச்சர் பொன்முடி, மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 
 

click me!