மோடியை திட்டுனா தான் கிளாப்ஸ் அள்ளுது.. பிடிவாதம் பிடிக்கும் உதயநிதி.. நெருக்கடியில் திமுக தலைமை..!

By Selva KathirFirst Published Oct 15, 2019, 10:28 AM IST
Highlights

தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பிரதமர் மோடியை மிக கடுமையாக விமர்சித்து பேசி வரும் உதயநிதி கட்சி மேலிடம் கூறியும் கூட கேட்க மறுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பிரதமர் மோடியை மிக கடுமையாக விமர்சித்து பேசி வரும் உதயநிதி கட்சி மேலிடம் கூறியும் கூட கேட்க மறுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை கடந்த மாதம் சந்தித்துவிட்டு வந்த பிறகு பாஜக எதிர்ப்பின் தீவிரத்தை சடசடவென குறைத்துக் கொண்டார் ஸ்டாலின். மோடி தமிழகம் வருகையின் போது கூட மூச்சு கூட விடவில்லை. அதே போல் வழக்கமாக கோ பேக் மோடி என்பதை திமுக ஐடி விங் தான் டிரெண்ட் செய்யும். ஆனால் இந்த முறை கோ பேக் மோடி விவகாரத்தில் திமுக தலையிடவில்லை.

இதே போல் இடைத்தேர்தல் பிரச்சாரத்திலும் கூட மோடி எதிர்ப்பு பேச்சுகளை சுத்தமாக தவிர்த்துவிடுகிறார் ஸ்டாலின். எடப்பாடி பழனிசாமியை அட்டாக் செய்வதோடு நிறுத்திக் கொள்கிறார். கடமைக்கு என்று ஒரு சில கருத்துகளை மட்டும் பாஜக அரசுக்கு எதிராக ஸ்டாலின் கூறி வருகிறார். இதற்கெல்லாம் காரணம் பாஜக மேலிடத்துடன் ஏற்பட்டுள்ள ஒரு அன்டர்ஸ்டேன்டிங் தான் என்று பரவலாக பேசப்பட்டு வந்தது.

ஸ்டாலின் மட்டும் அல்லாமல் திமுக முன்னணி நிர்வாகிகள் பாஜக, மோடி எதிர்ப்பில் இருந்து பின்வாங்கியுள்ளனர். விவாதங்களின் போது மிகவும் கவனமாக இந்த விவகாரத்தை கையாள்கின்றனர். ஆனால் திமுக இளைஞர் அணிச் செயலாளர் மோடி எதிர்ப்பு என்கிற தன்னுடைய நிலைப்பாட்டை ஒரு இம்மி அளவிற்கு கூட அவர் குறைத்துக் கொள்ளவில்லை. செல்லும் இடங்களில் எல்லாம் மோடியை மிக கடுமையாக விமர்சிக்கிறார் உதயநிதி.

தமிழகத்தில் இருந்து மக்கள் மோடியை ஓட ஓட விரட்டினார்கள். மோடியில் ஜால்ஜாப்பு தமிழகத்தில் செல்லாது என்றெல்லாம் தெறிக்கவிடுகிறார். உதயநிதியின் இந்த பேச்சு குறித்து திமுக தலைமை கவலையில் ஆழ்ந்ததாக சொல்கிறார்கள். ஏனென்றால் ஒரு அன்டர்ஸ்டேன்டிங்கில் நாம் போய்க் கொண்டிருக்கும் போது தம்பி இப்படி பேசலாமா? என்று ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்றதாகவும் சொல்கிறார்கள்.

ஆனால் ஸ்டாலின் இதனை சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை என்கிறார்கள். ஆனால் மோடியை பற்றி பேசினால் தான் கிளாப்ஸ் அள்ளுது என்பதால் அதை நிறுத்தும் பேச்சுக்கே இடமில்லை என்று உதயநிதி தரப்பில் இருந்து திமுக தலைமைக்கு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதாகவும் பேசிக் கொள்கிறார்கள்.

click me!