திமுக இளைஞரணி செயலாளராக பதவியேற்கப் போகும் உதயநிதி ஸ்டாலின் !! எப்போ தெரியுமா ?

Published : Jun 19, 2019, 11:35 AM IST
திமுக இளைஞரணி செயலாளராக பதவியேற்கப் போகும் உதயநிதி ஸ்டாலின் !! எப்போ தெரியுமா ?

சுருக்கம்

திமுக இளைஞரணி செயலாளராக பதவியேற்கப் போகும் உதயநிதி ஸ்டாலின் !! எப்போ தெரியுமா ? 

திமுக தலைவர் ஸ்டாலினின் மகன் உதயநிதிக்கு திமுக இளைஞரணியின் மாநில செயலாளர் பதவி என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவே தெரிகிறது.

மக்களவைத் தேர்தலில் உதயநிதி தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து பிரச்சார பீரங்கியாக மாறினார். திமுக வேட்பாளர்களும் அவரை போட்டி போட்டுக் கொண்டு உதயநிதியை பிரச்சாரம் செய்ய அழைத்து வ்ந்தனர்.

இதையடுத்து திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதியை நியமிக்க வேண்டும் என்று  பல இடங்களில் இருந்து திமுகவினர் தீர்மானம் நிறைவேற்றி தலைமைக் கழகத்துக்கு அனுப்பினர்.

இந்நிலையில் இளைஞரணி செயலாளராக இருந்த  வெள்ளக்கோவில் சாமிநாதன் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்ட நிலையில் இந்த பதவிக்கு உதயநிதியின் பெயர் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது 

இந்த நிலையில் உதயநிதியின் பதவியேற்பு விழாவை தள்ளி வைக்கும்படி மு.க.ஸ்டாலினுக்கு திமுக மூத்த தலைவர்கள் சிலர் ஆலோசனை கூறியுள்ளார்களாம். கருணாநிதி இறந்து ஓராண்டுகூட நிறைவடைய வில்லை என்றும் அதனால் கட்சியின் சுபநிகழ்ச்சிகள் எதுவும் இப்போது வேண்டாம் என்றும் மூத்த தலைவர்கள் கூறியுள்ளதால் உதயநிதியின் பட்டாபிஷேகம் தள்ளிப்போயுள்ளதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன. 

அதுமட்டுமின்றி உதயநிதியின் ஜாதகப்படி அவருக்கு இப்போது நேரம் சரியில்லையாம். ஒரு மாதம் கழித்து பதவியேற்பு விழா நடத்துவதுதான் நல்லது என்று ஜோசியர்கள் கூறியுள்ளார்களாம். 

இருப்பினும் வரும் ஜூலை மாதம் உதயநிதியின் பதவியேற்பு விழா நடைபெறும் என கூறப்படுகிறது. பதவியேற்றவுடன் உதயநிதி தான் திமுகவின் பிரச்சார பீரங்கியாகவும், முக்கிய முடிவுகளை எடுப்பவராகவும் இருப்பார் என தெரிகிறது. 

PREV
click me!

Recommended Stories

ஆபரேஷன் சிந்தூரின் முதல் நாளிலேயே பாகிஸ்தானிடம் அடி வாங்கியது இந்தியா..! காங்கிரஸ் தலைவர் சர்ச்சை பேச்சு..!
சமத்துவப் பாட்டன் பாரதி..! சாதிவெறி ஐயா ஈவேரா..! அதிர வைக்கும் நாம் தமிழர் கருத்தரங்கம் போஸ்டர்