திமுக மகளிர் அணி புரவலர் நூர்ஜகான் மரணம்…. மு.க.ஸ்டாலின் இன்று நேரில் அஞ்சலி செலுத்துகிறார் …

By Selvanayagam PFirst Published Oct 25, 2018, 7:44 AM IST
Highlights

உடல்நலக்குறைவு காரணமாக திமுக மகளிர் அணியின் புரவலர் எம்.ஏ.நூர்ஜகான், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நேற்று இரவு 9 மணியளவில் மரணமடைந்தார். அவருக்கு வயது 73.

திண்டுக்கலைச் சேர்ந்த நூர்ஜகான் தொடக்க காலத்தில் இருந்து திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டவர். மறைந்த  திமுக தலைவர் கருணாநிதி, தற்போதைய தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி ஆகியோருக்கு மிக நெருக்கமானவர்.

 

73 வயதான் இவர் உடலநலக்குறைவு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பலன் இன்றி நேற்று இரவு அவர் மரணமடைந்தார்.

 

இதையடுத்து அவரது உடல் திண்டுக்கல்லில் உள்ள நூர்ஜகானின் வீட்டில் திமுக தொண்டர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

 

மறைர் நூர்ஜகான் பேகத்திற்கு அப்துல் வஹாப் என்ற கணவரும், முகமது சுல்தான் என்ற மகனும், வஹிதா பேகம், ரோஷன் பேகம் என்ற இரு மகள்களும் உள்ளனர். நூர்ஜகான்  திமுகவுக்கு ஆற்றிய பணிகளைப் பாராட்டி  1995 ஆம் ஆண்டு கருணாநிதி அவருக்கு கலைஞர் விருதினை வழங்கினார்.

 

இதே போல் திமுக மேடைகளில் இவரது  பேச்கைக் கேட்க ஒரு பெருங் கூட்டமே காத்திருக்கும், தனது பேச்சால் அனைவரையும் கட்டிப் போடும் திறமை மிகுந்தவர். தற்போது நூர்ஜகானின் உடல் திண்டுக்கலில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு இன்று மாலை திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்துகிறார்.

click me!