தமிழகத்தில் மண்ணைக் கவ்வும் அதிமுக…. வெற்றியைத் தட்டிச் செல்லும் திமுக கூட்டணி !! எந்தக் கட்சிக்கு எத்தனை இடங்கள் ?

By Selvanayagam PFirst Published May 19, 2019, 8:29 PM IST
Highlights

நாடு முழுவதும் எக்ஸிட் போல் கருத்துக் கணிப்பு முடிவுகளில் பாஜக அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி மண்ணைக் கவ்வும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் அறிவிக்கப்பட்டன. ஆனால் வேலூர் தொகுதியில் மட்டும் பணப்பட்டுவாடா குற்றச்சாட்டு எழுந்ததால் தேர்தல் நடத்தப்படவில்லை. 38 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றன.

7 மற்றும் இறுதிக்கட்ட  தேர்தல்கள் இன்று முடிவடைந்த நிலையில் இன்று பல்வேறு தொலைக்காட்சிகள் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டுளளன.

அதன்படி டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணி 29 இடங்களையும், அதிமுக கூட்டணி 9 இடங்களையும் பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுளளது.

நியூஸ் எக்ஸ் தொலைக்காட்சியில் திமுக கூட்டணி 34 முதல் 38 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், அதிமுக கூட்டணிக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்றும் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இழுபறியாக உள்ள 4 இடங்கள் அதிமக கூட்டணிக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிஎன்என் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணி 22 முதல் 24 இடங்களைப் பிடிக்கும் என்றும், அதிமுக கூட்டணி  6 முதல் 14 இடங்களைப் பிடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா டுடே வெளியிட்டுள்ள கருதுக்கணிப்பு முடிவுகள் திமுக கூட்டணி 34 முத்ல் 38 இடங்களைக் கைப்பற்றும் என்றும் அதிமுக கூட்டணி 0 முதல் 4 இடங்களைக் கைப்பற்ற வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல் என்டிடிவியின் கருத்துக் கணிப்பு முடிவுகளில் திமுக கூட்டணி   25 இடங்களிலும் அதிமக கூட்டணி 12 இடங்களிலும் வெற்றி பெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சேனல்களிலும் வெவ்வேறு விதமான கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளிவந்தாலும், பெரும்பான்மை இடங்களை திமுகவே கைப்பற்றும் என தெரியவந்துள்ளதால் அக்கட்சித் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

click me!