திருவண்ணாமலையில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறைக் கூட்டத்தில் என் மீதும் அதிமுக மீதும் அடிப்படை ஆதாரம் மற்றும் அரசியல் நாகரிகமின்றி பேசிய ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நீட் விவகாரத்தில் நாங்கள் செய்ததைதான் இரண்டரை ஆண்டு கால ஆட்சியில் திமுகவும் செய்துள்ளது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான ;- 2024 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2026 சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி கிடையாது. ஏற்கனவே பல முறை தெளிவாக சொல்லிட்டேன். அதிமுக தலைமையில் சிறப்பான கூட்டணியை அமைத்து நாங்கள் இனி தேர்தல்களை சந்திப்போம். திமுக தேர்தல் முகவர் கூட்டத்தில் என்னை பற்றித்தான் முதல்வர் ஸ்டாலின் அதிகமாக பேசியுள்ளார். நான் ஊடகங்களுக்கு இதுவரை பொய் செய்தியை தந்தது கிடையாது. அதிமுகவுக்கு சிறுபான்மை மக்களிடையே ஆதரவு பெருகி வருவது கண்டு ஸ்டாலின் பொய் குற்றச்சாட்டை கூறி வருகிறார்.
இதையும் படிங்க;- பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதுமே முதல்வர் ஸ்டாலினுக்கு பயம் வந்துருச்சு.. எடப்பாடி பழனிசாமி.!
திருவண்ணாமலையில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறைக் கூட்டத்தில் என் மீதும் அதிமுக மீதும் அடிப்படை ஆதாரம் மற்றும் அரசியல் நாகரிகமின்றி பேசிய ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தான் வகிப்பது பெருமை மிக்க முதலமைச்சர் பதவி என்பதை ஸ்டாலின் மறந்துவிட்டார். ஸ்டாலினின் பேச்சு அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய் என்ற பழமொழியை நிரூபிப்பதாக உள்ளது. இனியாவது ஸ்டாலின் பொய் பிரச்சாரத்தை நிறுத்திவிட்டு தமிழ்நாட்டில் நிலைமை என்ன என்பதை தனது காவல்துறையை வைத்து விசாரிக்கவும் என்றார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
மேலும் பேசிய இபிஎஸ் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,000 எனக்கூறி ஏமாற்றிவிட்டது திமுக அரசு. நாட்டில் நீட் தேர்வை கொண்டு வந்த காங்கிரஸ் திமுக கூட்டணி தற்போது அதனை எதிர்ப்பதுதான் வேடிக்கை. நீட் விவகாரத்தில் நாங்கள் செய்ததைதான் இரண்டரை ஆண்டு கால ஆட்சியில் திமுகவும் செய்துள்ளது. சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம் செய்து அனுப்பினீர்கள், அதை நாங்களும் தான் செய்தோம். நீட் தேர்வை ரத்து செய்ய 50 லட்சம் பேரிடம் கையெழுத்து வாக்குவதுதான் உதயநிதி சொன்ன ரகசியா? என கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க;- முதலமைச்சராக இருந்த ஸ்டாலின் தற்போது யூ டியூபராக மாறிவிட்டார்- இறங்கி அடிக்கும் ஜெயக்குமார்
தேர்தல் வாக்குறுதிகளை 100 சதவீதம் நிறைவேற்றியதாக முதலமைச்சர் ஸ்டாலின் பொய் பேசுகிறார். 29 மாத ஆட்சியில் மக்கள் நலனுக்காக எந்த ஒரு திட்டத்தையும் அறிவிக்கவில்லை, செயல்படுத்தவில்லை. இனியாவது மக்களுக்கு பயனளிக்கும் வகையில் நல்ல திட்டங்களை செயல்படுத்த வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு தமிழக மக்கள் முட்டையை பரிசாக கொடுப்பார்கள். ஆரியம், திராவிடம் இருக்கிறதா, இல்லையா என அறிஞர்கள்தான் கூற வேண்டும். நான் அந்த அளவுக்கு படித்தவன் அல்ல. ஆளுநரின் கருத்து குறித்த செய்தியாளரின் கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி மழுப்பலாக பதில் அளித்தார்.