குலசேகரபட்டினம் அருகில் உள்ள கூடல் நகர் அமராபுரம், மணப்பாடு, மாதவன்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் 2,100 ஏக்கர் நிலம் அரசால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இந்த இடங்களை சுற்றி இரும்பு கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் டிசம்பர் மாதம் 2வது வாரம் பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ்தாவன் விண்வெளி ஆய்வு மையம் உள்ளது. அங்கு இரு ராக்கெட் ஏவுதளங்கள் செயல்பட்டு வருகின்ற. அதேபோன்று மற்றொரு இடத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க இஸ்ரோ முடிவு செய்ததை அடுத்து இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களை ஆய்வு பணிகளை மேற்கொண்டது. இதில், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டனம் தேர்வு செய்யப்பட்டது.
இதற்காக குலசேகரபட்டினம் அருகில் உள்ள கூடல் நகர் அமராபுரம், மணப்பாடு, மாதவன்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் 2,100 ஏக்கர் நிலம் அரசால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இந்த இடங்களை சுற்றி இரும்பு கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. அங்கு ரூ.6 கோடி செலவில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியும் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
இதையும் படிங்க;- திடீர் குபீர் நாட்டுப்பற்றாளர்கள்: ஆளுநரை சாடிய முதல்வர் ஸ்டாலின்!
குறைந்த எடைகொண்ட எஸ்எஸ்எல்வி ரக ராக்கெட்டுகளை ஏவ குலசேகரபட்டின ஏவுதளம் அமைகிறது. தேவைப்படும் நிலம் முழுவதும் கிடைத்து விட்டதால் ஏவுதளம் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற உள்ளது. இந்த கட்டுமான பணிகளை தொடங்கி வைக்க பிரதமர் மோடி டிசம்பர் மாதம் குலசேகரபட்டினம் வருகை தருகிறார். ராக்கெட் தொழிற்நுட்ப கல்லுாரி அமைப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கும், பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளார்.
இதனிடையே நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய நிலையில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், டிடிவி.தினகரன், பாமக, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகளை ஒற்றிணைத்து வலுவான கூட்டணி அமைக்க உள்ளனர். இதற்கான பேச்சுவார்த்தை திரைமறைவில் ரகசியமாக நடந்து வரும் நிலையில் பிரதமர் மோடி தமிழகம் வரும் போது கூட்டணி தலைவர்கள் அவரை சந்தித்து பேச வாய்ப்புள்ளது.பின்னர், கூட்டணி பேச்சு, தொகுதி பங்கீடு குறித்த பேச்சை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.