இனி எந்தக் காலத்திலும் திமுக ஆட்சிக்கு வரமுடியாது !! பாமக ராமதாஸ் அதிரடி பேச்சு !!

Published : Apr 01, 2019, 08:36 AM IST
இனி எந்தக் காலத்திலும் திமுக ஆட்சிக்கு வரமுடியாது !! பாமக ராமதாஸ் அதிரடி பேச்சு !!

சுருக்கம்

ஸ்டாலின் தலைமையிலான திமுக இனி ஒரு போதும் ஆட்சிக்க வர முடியாது என்று  விருத்தாசலத்தில்  நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பாமக ராமதாஸ் தெரிவித்தார்.  

அதிமுக  தலைமையிலான கூட்டணியில் கடலுார் மக்களவைத்  தொகுதி பாமக வேட்பாளர் கோவிந்தசாமியை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் விருத்தாசலத்தில் நடைபெற்றது.

அதில் பங்கேற்றுப் பேசிய பாமக ராமதாஸ், நாங்கள் வெற்றி பெற்றால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் கடலூரில் போட்டிணிடும் திமுக , வேட்பாளரை டிபாசிட் இழக்க செய்ய வேண்டும் என கூறினார். . அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்புக்கு கோரிக்கைகள் குறித்து சில வருத்தம் உள்ளது.இவர்களின் கோரிக்கைகள் தேர்தல் முடிந்ததும், முலமைச்சர் எடப்பாடி  பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ் ஆகியோருடன் பேசி நிறைவேற்றப்படும் என கூறினார்.

எதிர்க்கட்சியான திமுக இனி எந்த காலத்திலும் ஆட்சிக்கு வர முடியாது என்றும் ராமதாஸ் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் திமுகவைச் சேர்ந்த ., சிங்காரவேல், அ.ம.மு.க., மணிமாறன் ஆகியோர் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் அக்கட்சிகளில்  இருந்து விலகி ராமதாஸ் முன்னிலையில் பாமகவில் இணைந்தனர். 

இதே போன்று பாமகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் நகர தலைவர் சீனுவாசன், மீண்டும் அக்கட்சியில் இணைந்தார். 

PREV
click me!

Recommended Stories

களத்திற்கே வராத விஜய் களத்தை பற்றி பேசலாமா? இடைத்தேர்தல் நடக்கும்போது எங்க போனீங்க..? சீமான் கேள்வி
அல்லாஹவிடம் ஒப்படைக்கிறோம்..! ஹாதியின் மந்திரம் தொடர்ந்து எதிரொலிக்கும்..! உஸ்மான் இறுதிச் சடங்கில் யூனுஸ் சூளுரை..