தி.மு.க., அரசின் அதிகார செல்வச் செருக்கை முறித்தெறிவோம்... ஓ.பி.எஸ் சூளுரை..!

By Thiraviaraj RMFirst Published Jan 14, 2022, 12:52 PM IST
Highlights

சாதாரண மக்கள் மீதான தி.மு.க.,வின் அடக்குமுறை, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றுக்கு எதிரானதாக உள்ளது.

தி.மு.க., அரசின் அதிகார செல்வச் செருக்கை முறித்தெறிய வேண்டிய கடமை, அ.தி.மு.க.,வுக்கு ஏற்பட்டுள்ளது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் பொங்கல் பரிசுத் தொகுப்பில் உள்ள புளியில் பல்லி இறந்து கிடந்ததை, நந்தன் என்பவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார். அவர் மீது பிணையில் வெளிவர முடியாத வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் விரக்தி அடைந்த அவரது மகன் பாபு தீக்குளித்து உயிரிழந்தார். இதற்கு பெரும் கண்டனம் எழுந்தது. 

பொங்கல் தொகுப்பில் இருந்த குறையை சுட்டிக்காட்டியவர் மீது, பொய் வழக்கு போட்டு, அந்தக் குடும்பத்தில் ஓர் உயிரிழப்பு ஏற்படக் காரணமாக இருந்த, தி.மு.க., அரசுக்கு, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், ‘’தி.மு.க.,வின் அதிகார செல்வச் செருக்கை முறித்தெறிய வேண்டிய கடமை, அ.தி.மு.க.,வுக்கு ஏற்பட்டுள்ளது. ஏனெனில், சாதாரண மக்கள் மீதான தி.மு.க.,வின் அடக்குமுறை, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றுக்கு எதிரானதாக உள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் பொங்கல் பரிசுத் தொகுப்பில் உள்ள புளியில் பல்லி இறந்து கிடந்ததை, நந்தன் என்பவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.


இது, அ.தி.மு.க., சார்பிலும் சுட்டிக்காட்டப்பட்டது. பிற பகுதிகளில் இதுபோன்று நிகழக் கூடாது என்பதற்காகத் தானே தவிர, அரசின் மீது குற்றம் சுமத்துவதற்காக அல்ல. அதன் உண்மைத் தன்மையை ஆராய்ந்து, அதற்கேற்ப நடவடிக்கை எடுப்பதுதான் அரசின் ஆக்கப்பூர்வமான செயல். அதை விடுத்து, குறையை சுட்டிக்காட்டுபவர் மீதே, நடவடிக்கை எடுப்பது, உண்மையை மூடி மறைக்க முற்படும் செயல்.

அவர் மீது ஜாமினில் வர இயலாத அளவுக்கு, ஒரு வழக்கை, திருத்தணி போலீசார் பதிவு செய்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான, அவரது மகன் பாபு என்கிற குப்புசாமி தீக்குளித்து இறந்துள்ளார். குப்புசாமி இறப்புக்கு தி.மு.க., அரசே காரணம். மக்கள் பயப்படும்படியாக ஆட்சி நடத்தும், இந்த அரசு வீழும் நாள் வெகு துாரத்தில் இல்லை’’ என அவர் தெரிவித்தார். 

click me!