திமுக வெற்றி சந்தேகம் தான்... புலம்பும் பிரஷாந்த் கிஷோர்..?

By Thiraviaraj RMFirst Published Dec 28, 2020, 10:52 AM IST
Highlights

வரும் 2021 சட்டசபை தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்று விடலாம் என தி.மு.க., தலைமை நம்பிக்கையுடன் இருந்து வருகிறது. நடிகர் ரஜினிகாந்தும், கட்சி துவங்கி தேர்தலில் போட்டியிட உள்ளார். 'இதனால் தி.மு.க.,வின் வெற்றி பாதிக்குப்படுமா? பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 
இந்நிலையில், தி.மு.க.,வின் தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர், தனக்கு நெருக்கமானவர்களிடம் 'தமிழகத்திலுள்ள அரசியல் சூழ்நிலையில், தி.மு.க.,வுக்குத் தான், வெற்றி என நினைத்தேன். ஆனால், ரஜினி வரவிற்கு பிறகு நிலைமை மாறிவிட்டது. அவரது கட்சியால் தி.மு.க.,வுக்கு அதிக பாதிப்பு வரும். பெரும்பான்மை கிடைப்பது சந்தேகம் தான்' என டெல்லி வட்டாரத்தில் பிரசாந்த் கிஷோர் கூறியதாக தகவல். 

இதனை கேள்விப்பட்ட திமுக எம்.பி., ஒருவர், 'மேற்கு வங்கத்தில், மம்தா பானர்ஜியின் உறவினர் அபிஷேக் பானர்ஜி மூலமாக அந்த கட்சிப் பணிகளுக்குள் நுழைந்தார் பிரசாந்த் கிஷோர். தி.மு.க.,வுக்குள்ளும், தலைமையின் உறவினர்கள் வாயிலாக, கட்சி பணிகளில் தலையிட்டு குழப்பத்தை ஏற்படுத்துகிறார்’’ என கோபப்படுகிறார். 
 
click me!