திமுகவின் வெற்றி நிச்சயிக்கப்பட்ட ஒன்று... மு.க. ஸ்டாலிதான் அடுத்த முதல்வர்... கனிமொழி தாறுமாறு கணிப்பு..!

By Asianet TamilFirst Published Jan 29, 2021, 9:17 PM IST
Highlights

திமுகவின் வெற்றி வாய்ப்பு என்பது யார் வந்தாலும் வரவில்லை என்றாலும் நிச்சயிக்கப்பட்ட ஒன்று என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
 

திமுக எம்.பி.யும் அக்கட்சியின் மகளிரணி தலைவியுமான கனிமொழி புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்பதே திமுகவின் கோரிக்கையாகும். இந்த சட்டங்களை திமுக முற்றிலுமாக எதிர்க்கிறது. அந்தச் சட்டங்களை எதிர்த்துதான் டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தக் காலத்தில் தொழில்நுட்ப அளவில் உதவி செய்ய அனைத்துக் கட்சிகளுக்கும் நிறுவனங்கள் உள்ளன. இதையெல்லாம் விமர்சனமாக செய்ய முடியாது.


மற்றவர்களைப்போல் நிமிடத்துக்கு நிமிடம் கொள்கைகளை மாற்றிக் கொள்ளும் கட்சியல்ல திமுக. ஜெயலலிதா நினைவிடத்தை திறந்த சூழலில், அவர் வழியில் ஆட்சி நடத்துகிறோம் என்று கூறுபவர்கள்தான் ஜெயலலிதா எதிர்த்த உதய் மின் திட்டம், நீட் தேர்வு உள்ளிட்டவற்றை கொண்டு வந்துவிட்டு மற்றவர்களை விமர்சிக்கிறார்கள். அதிமுக ஆட்சியில் புதிதாக எந்தத் திட்டத்தையும் கொண்டு வரவில்லை, பெண்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை. பொள்ளாச்சி உள்பட பல்வேறு இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நடந்து வருகிறது.


குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையே நிலவுகிறது. இதுதான் ஜெயலலிதா வழியில் நடத்தும் ஆட்சியா? திமுகவின் வெற்றி வாய்ப்பு என்பது யார் வந்தாலும் வரவில்லை என்றாலும் நிச்சயிக்கப்பட்ட ஒன்று. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை திமுக அடைந்து‌ ஸ்டாலின் முதல்வராவார். திமுக - காங்கிரஸ் கூட்டணி விரிசல் என்பது புனையப்பட்ட கதை” என்று கனிமொழி தெரிவித்தார். 

click me!