மதுரையில் மு.க. அழகிரி - ஜே.பி. நட்டா சந்திப்பு..? பாஜக தலைவர் அதிரடி விளக்கம்..!

By Asianet TamilFirst Published Jan 29, 2021, 9:10 PM IST
Highlights

மதுரையில் மு.க. அழகிரி - பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா சந்திப்பு நிகழுமா என்பது குறித்து தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் விளக்கம் அளித்துள்ளார்.
 

தமிழக பாஜக தலைவர் முருகன் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “ பாஜக தேசிய  தலைவர் ஜே.பி. நட்டா தமிழகம் வர உள்ளது தமிழக பாஜக நிர்வாகிகளுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும்.  நட்டாவை மதுரையில் சிறப்பான முறையில் வரவேற்க திட்டமிட்டுள்ளோம்.” என்றார். ஜே.பி. நட்டா மு.க. அழகிரியைச் சந்திப்பாரா என்ற கேள்விக்குப் பதில் அளித்த எல்.முருகன், “ஜே.பி. நட்டாவின் வருகை தங்களது அமைப்பு குறித்தான கூட்டத்தில் பங்கேற்க மட்டும்தான். இதில் அரசியல் காரணம் எதுவும் இல்லை.” என்று தெரிவித்தார்.


மேலும் எல்.முருகன் கூறுகையில், “கடந்த ஏழு ஆண்டுகளாக இந்தியாவின் நிதிநிலை அதல பாதாளத்திற்குத் தள்ளியதுதான் பாஜகவின் சாதனை என ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த காலத்தைவிட தற்போதைய பாஜக ஆட்சி காலத்தில் சிறப்பான முறையில் நிதி நிர்வாகம் செயல்படுகிறது. வேளாண் சட்டங்களை முழுமையாக படித்து விட்டால் நாடே பற்றி எரியும் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி வேளாண் சட்டத்தை முழுமையாக படிக்காததையே இது காட்டுகிறது.


அதை முழுமையாகப் படித்தவர்கள் வேளாண் சட்டத்தை ஆதரிக்கின்றனர். அதனை படிக்காதவர்களே ஏற்க மறுக்கிறார்கள். சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக 41 சீட்டுகள் கேட்பதெல்லாம் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை முடிந்த பிறகே கூற முடியும்.” என்று தெரிவித்துள்ளார்.

click me!