
9 மாவட்டங்களில் இரு கட்டங்களாக கடந்த 6ம் தேதியும், 9ம் தேதியும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றன. இந்நிலையில் இன்று வாக்குப்பதிவு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி மாவட்ட கவுன்சிலர்கள் சார்பில் போட்டியிட்ட 140 இடங்களில் திமுக 15 இடங்களிலும், 1380 இடங்களுக்கான ஒன்றிய கவுன்சிலர்கள் வேட்பாளர்களில் திமுக 33 இடங்களிலும், மற்றவர்கள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
இதில் எதிர்கட்சியான அதிமுக சார்பிலும், மற்றவர்களும் ஒரு இடத்தில்கூட வெற்றிபெறவில்லை. இன்னும் தேர்தல் எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.