நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கொங்கு மண்டலமான கோவையில் ஒரு தொகுதியில் கூட அதிமுக வெற்றி பெறவில்லை. சேலத்தில் ஒரு தொகுதியில் பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் வெற்றி பெற்றாலும் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.
வருகிற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கொங்கு மண்டலம் மற்றும் வட மாவட்டங்களில் திமுக வெற்றி பெறுவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு வியூகங்களை வகுத்து வருவதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கொங்கு மண்டலமான கோவையில் ஒரு தொகுதியில் கூட அதிமுக வெற்றி பெறவில்லை. சேலத்தில் ஒரு தொகுதியில் பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் வெற்றி பெற்றாலும் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. அதேபோல் தர்மபுரி மாவட்டத்திலும் திமுக சொல்லும்படி வெற்றி பெறவில்லை. இந்நிலையில் தான் கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக கொங்கு மண்டலத்தில் உள்ள கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றது. தேர்தலுக்கு முன்பே அங்கு நான்கு தொகுதிகளில் வெற்றிபெறும் என்று பாலாஜி செந்தில்பாலாஜி கூறியிருந்தார். அவர் சொன்னது போலவே பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த சட்டமன்றத் தேர்தலில் பணத்தை வாரி இறைத்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போன்ற முக்கிய தலைகளை தோற்கடித்து திமுக வேட்பாளர்களை வெற்றி பெற வைத்தார் செந்தில் பாலாஜி.
இதற்கு முன்பு அவர் சொன்னபடியே செய்து காட்டியதால் அவருக்கு அமைச்சரவையில் மூத்த அமைச்சர்கள் சிலர் எதிர்பார்த்திருந்த முக்கியத் துறைகளை கைமாறாக கொடுத்தார் முதல்வர் ஸ்டாலின். ஆனால் கோவையில் உள்ள 10 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்று கோவை அதிமுகவின் கோட்டை என்பதை நிரூபித்தது. இந்த நிலையில் தான் வரும் நகர்ப்பகுதிகளில் கோவை மாநகராட்சியை திமுக கைப்பற்றி ஆக வேண்டும் என்ற நோக்கில் கோவைக்கு பொறுப்பு அமைச்சராக தனது நம்பிக்கைக்கு உரியவராக செந்தில்பாலாஜியை நியமித்தார் ஸ்டாலின். செந்தில் பாலாஜியும் கோவை கரூர் சென்னை என வட்டம் அடித்தபடியே இருந்தார். கோவையில் தாலிக்குத் தங்கம் உள்ளிட்ட ஏராளமான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஆனாலும் கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய முடிவுகளை திமுக தலைமைக்கு எடுத்துக் கூறியிருக்கிறார். அங்கு இதே நிலை நீடித்தால் திமுக 50% தான் வெற்றி பெற முடியும் என்று அவர் சொன்னதாக ஒரு தகவல் உண்டு.
எனவே கோவையில் நகர் பொதுத் தேர்தலில் வெற்றி ஒன்றே குறிக்கோள் என்ற வகையில் திட்டங்களை செந்தில் பாலாஜி முடிவு செய்துள்ளார். அதாவது யாருக்கு சீட் கொடுத்தால் கட்சியினர் உள்ளடி வேலை பார்ப்பார்கள், அவர்களுக்குக் கொடுக்க வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறார் எந்த ஒரு உட்கட்சி பூசலில் தலையிடாதீர்கள் அவர்களுக்கு ஈடுகொடுத்து கோவை மாநகராட்சியை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்று காய் நகர்த்தி வருகிறார்.
அதேபோல் சேலம் மாவட்டத்திற்கு கே.என்.நேருவை நியமித்திருக்கிறார்கள். ஏனென்றால் கே.என். நேவுக்கும் வீரபாண்டி ஆறுமுகத்தின் குடும்பத்திற்கும் உள்ள நெருக்கம் அரசியலைத் தாண்டி அனைவருக்கும் நன்றாக தெரியும். வீரபாண்டியார் மறைவிற்குப் பிறகு வீரபாண்டி ராஜா தனது மனக்குமுறலை கண்ணீர்விட்டு கொட்டினார். கொஞ்சம் பொறுமையாக இருங்கள் நான் உங்கள் நிலையை தலைவருக்கு சொல்லி செய்து கொடுக்கிறேன் என்று நேருவும் சொல்லி வந்தார். அதற்குள் துரதிருஷ்டவசமாக வீரபாண்டி ராஜா இறந்துவிட்டார்.
வீரபாண்டியார் குடும்பத்திற்கும் பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் குடும்பத்திற்கும் பகை. அதனால் தான் கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக சேலத்தில் படுதோல்வியடைந்தது. வீரபாண்டியார் இறக்கும்போது சேலம் மாவட்டத்தை திமுகவின் கோட்டையாகவே வைத்து இருந்தார். இந்த நிலையில்தான் இரு குடும்பத்திற்கு பலமாகவும் திமுக நிலைகளில் உண்மையான மனக்குமுறலை அறிந்து நடவடிக்கை எடுப்பதற்கு கே.என்.நேருவை அமைர்த்தியுள்ளார் ஸ்டாலின். அவரும் திருச்சி, சேலம், சென்னை என பறந்து பறந்து கடந்த சட்டமன்ற தேர்தலின் போது இருந்த நிலையை தற்போது மாற்றி இருப்பதாக சொல்கிறார்கள்.
தர்மபுரி மாவட்டத்திற்கு கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சரான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை இப்பொழுது பொறுப்பு அமைச்சராக நியமித்து இருக்கிறார்கள். இவருக்கு தொகுதி புதிது தான் என்றாலும் சமீபத்தில் செந்தில் பாலாஜியும் மூலமாக முன்னாள் அமைச்சர் பழனியப்பன் திமுகவில் இணைகிறார். இவருக்கு பகுதியில் உள்ள மக்களிடையே நல்ல பரிச்சயம் உண்டு. எங்கெங்கே திமுக பலவீனமாக இருக்கிறது என்பதை அறிந்து அங்கு என்ன செய்ய வேண்டும் என்பதை எம்ஆர்கேவிடம் சொல்லி இருக்கிறார். அவருக்கு அங்கு உள்ள குறைகளை நிவர்த்தி செய்து இருக்கிறார். எனவே இந்த மூன்று மண்டலங்களையும் திமுக வசப்படுத்த முகவர்களை நியமித்து மு க ஸ்டாலின் புதிய திட்டங்களை கையில் எடுத்திருக்கிறார். இதற்கு நகர்ப்புற தேர்தலில் நல்ல பலன் கிடைக்கும் என்று கூறுகிறார்கள்