ஆளத்துடிக்கும் ஸ்டாலினுக்கு முதலில் ‘அந்த’ தகுதி இல்லையே..? ஏன்..! சீறித் தள்ளும் சீமான் டீம்..!

By Vishnu PriyaFirst Published May 16, 2019, 12:43 PM IST
Highlights

ஒரு பிரளயம் உருவாகிட ஒரு வார்த்தை கூட போதும்! என்பார்க்ள். ஸ்டாலின் மற்றும் சீமான் இருவருக்கும் இடையில் போர் நடந்திட உண்மையிலேயே ஒரேயொரு வார்த்தைதான் காரணமாகி இருக்கிறது. அந்த வார்த்தை ‘கேணையன்’ என்பதுதான். 

ஒரு பிரளயம் உருவாகிட ஒரு வார்த்தை கூட போதும்! என்பார்க்ள். ஸ்டாலின் மற்றும் சீமான் இருவருக்கும் இடையில் போர் நடந்திட உண்மையிலேயே ஒரேயொரு வார்த்தைதான் காரணமாகி இருக்கிறது. அந்த வார்த்தை ‘கேணையன்’ என்பதுதான்.  

தி.மு.க.வின் செய்தித் தொடர்பாளரான தமிழன் பிரசன்னா “தன்னை செந்தமிழன் என சொல்லிக் கொள்ளும் சீமானுக்கு, திருக்குறளுக்கு கூட அர்த்தம் தெரியவில்லை. ‘மாடல்ல’ எனும் வார்த்தையை ‘செல்வம்’ எனும் அர்த்தத்தில் பயன்படுத்தியிருப்பார் வள்ளுவர். ஆனால் சீமானோ அந்த வார்த்தைக்கு ‘காளை, பசு’ என்று அர்த்தம் கற்பிக்கிறார். மாடல்ல என்றால் மாடு! என நினைத்துக் கொண்டிருக்கிறார். இதனால்தான் சொல்கிறேன் சீமான் ஒரு கேணைப்பயல்! என்று. இதை நான் கூட சொல்லவில்லை, அவரே பல மேடைகளில் தன்னைத்தானே அப்படி சொல்லியிருக்கிறார். “ என்று பேசிவிட்டார்.

 

இதில் கடும் டென்ஷனாகிவிட்டது நாம் தமிழர் கட்சி. இந்த விவகாரம் குறித்து நமது ஏஸியாநெட் தமிழ் இணையதளத்தில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம். இந்நிலையில், தமிழன் பிரசன்னாவுக்கு பதில் சொல்லும் வகையில் ஸ்டாலினை வறுத்தெடுத்திருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் செய்தித்தொடர்பாளரான செந்தில் குமார். அவர்  “குறிப்பெடுத்துக் கையில் வைத்திருந்தாலும் கூட உருப்படியாக பேசத் தெரியாத தலைவர்தான் ஸ்டாலின்.  இத்தனை வருடம் இந்த மண்ணை ஆண்ட திராவிடக் கட்சிகள், தமிழர்களை கேணையன் ஆக்கியிருப்பதாக பேசினாரே தவிர தன்னைத்தானே கேணையன் என்று ஒருபோதும் தலைவர் குறிப்பிட்டதில்லை. இதுதான் உண்மை. 

துண்டு சீட்டு வைத்துக் கொண்டும் கூட உளறிக்கொட்டாமல் இருக்க முடியவில்லை ஸ்டாலினுக்கு. ‘மதில் மேல் பூனை’ என்பதற்கு பதிலாக ‘பூனை மேல் மதில்’ என்கிறார். நான் எந்த தவறு வேண்டுமானாலும் செய்வேன், ஆனால் என்னை விமர்சனமே செய்யக்கூடாது என ஸ்டாலின் கூறக்கூடாது. தமிழகத்தை ஆளப்போகிறேன் என்று சொல்லிக்கொண்டிருப்பவர், இன்னும் இந்த பேச்சுத் தகுதியை கூட வளர்த்துக் கொள்ளவில்லையே. இப்பவும் சொல்கிறோம், எப்பவும் சொல்வோம்...தமிழர்களுக்கு பல துரோகங்களைச் செய்தது தி.மு.க.தான். தன்னை ஒரு களப்போராளி என்று சொல்லிக் கொண்ட கருணாநிதியால் ஏன் கடைசி வரை கச்சத் தீவை மீட்டெடுக்க முடியவில்லை?” என்று நறுக்கென கேட்டிருக்கிறார். ஓவர் டு ஸ்டாலின்....

click me!