
நேற்று காலை தமிழக சட்டமன்றம் முதல் நாள் கூடியது இதில் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டைக் கண்டித்து எதிர்க்கட்சி திமுக கருப்பு நிற உடையில் சட்டமன்றம் வந்த்து. மேலும் நேற்று முதல்வர் வசித்த விவர அறிக்கையில் துப்பாகி சூடு என்கிற வார்த்தை இடம்பெறவில்லை மாறாக விஷமிகள் ஊடுருவியதாக முதல்வர் கூறினார்.
உயிரிழந்த மக்களின் எண்ணிக்கையோ அல்லது காயமுற்றவர்களின் எண்ணிக்கையோ குறிப்பிடாமல் துப்பாக்கி சூடு என்கிற வார்த்தையும் இடம்பெறாத அறிக்கையை எதிர்க்கட்சிகள் ஏற்கவில்லை. மக்களுக்காக மெளன அஞ்சலியில் கூட துப்பாக்கி சூட நடந்த்த்தில் இறந்தவர்கள் என்று கூட தமிழக் அரசு கூறவில்லை
இதற்காக நேற்று சட்டமன்றத்தில் என்ன நடந்தது என்பதை காட்டும்வகையில் முறையாக என்ன நடந்திருக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டும் வகையிலும் இன்று திமுக மாதிரி சட்டமன்றத்தை நடத்திவருகிறது. அண்ணா அறிவாலயத்தில் மாதிரி சட்டசபை கூடியுள்ளது. இதில் காங்கிரஸ், முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இதில் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் பெயர்களை குறிப்பிட்டு மாதிரி சட்டமன்றத்தில் மெளன அஞ்சலியுடன் கூட்டம் தொடங்கியுள்ளது.