நெருக்கடியில் துரைமுருகன்... படுவேகத்தில் வருமான வரித்துறையினர்..!

By vinoth kumarFirst Published Apr 2, 2019, 11:01 AM IST
Highlights

வேலூரில் ரூ.11.48 கோடி பறிமுதல் விவகாரத்தில் பூஞ்சோலை சீனிவாசனுக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பூஞ்சோலை சீனிவாசன் மீது பினாமி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் வருமான வரித்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

வேலூரில் ரூ.11.48 கோடி பறிமுதல் விவகாரத்தில் பூஞ்சோலை சீனிவாசனுக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பூஞ்சோலை சீனிவாசன் மீது பினாமி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் வருமான வரித்துறையினர் திட்டமிட்டுள்ளனர். 

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை காட்பாடியில் உள்ள துரைமுருகன் வீடு கல்லூரி உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சனிக்கிழமை சோதனை முடிவுற்ற நிலையில் துரைமுருகன் வீட்டிலிருந்து பத்து லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் திமுகவின் தேர்தல் வியூகம் தொடர்பான முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் அள்ளிச் சென்றதாக கூறப்பட்டது. 

இதனையடுத்து கைப்பற்ற ஆவணங்கள் அடிப்படையில் துரைமுருகனின் உதவியாளர் அஸ்கர் அலி, பூஞ்சோலை சீனிவாசனின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான சிமென்ட் கிடங்கில் சோதனை நடத்தப்பட்டது. அந்த குடோனில் சாக்கு மூட்டைகள், அட்டைப் பெட்டிகள், துணிப் பைகள் ஆகியவற்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.11.48 கோடி பணத்தை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் வேலூரில் ரூ.11.48 கோடி பறிமுதல் விவகாரத்தில் பூஞ்சோலை சீனிவாசனுக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளது. பூஞ்சோலை சீனிவாசன் மீது பினாமி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் வருமான வரித்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதனால் திமுக தலைமைக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே சென்னை மாநகராட்சி ஒப்பந்ததாரர் சபேசன் வீட்டில் 15 கோடி ரூபாயை வருமான வரித்துறை கைபற்றினர். இது தொடர்பாகவும் வருமான வரித்துறையினர் சபேசனுக்கும் சம்மன் அனுப்பியுள்ளனர். 

click me!