திமுக ஆட்சி என்றாலே மின்வெட்டு, பாலியல் வன்கொடுமை... பழைய பார்முக்கு வந்த பிரேமலதா விஜயகாந்த்.

By Ezhilarasan BabuFirst Published Jun 2, 2022, 12:48 PM IST
Highlights

தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக விவசாய மற்றும் தொழிற்சாலைகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எனவே மின்வெட்டை போர்க்கால அடிப்படையில் களைய திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். 

தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக விவசாய மற்றும் தொழிற்சாலைகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எனவே மின்வெட்டை போர்க்கால அடிப்படையில் களைய திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மாவட்டச் செயலாளர் கூட்டம் நடைபெற்றது. அதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. முதல் தீர்மானமாக கழகத்தில் வளர்ச்சிப் பணிகளில் முழுமையாக செய்து நாட்டின் வளர்ச்சிக்காகவும் அதன் கொள்கைக்காகவும் வாழ்ந்து மறைந்த தேமுதிக தொண்டர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இரண்டாவது தீர்மானமாக விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாளான ஆகஸ்டு 25 வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடப்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, அதே நேரத்தில் தமிழகத்தில் கேப்டன் விஜயகாந்த் தலைமையில் ஆட்சி அமைத்திட தேமுதிக நிர்வாகிகள் தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மூன்றாவதாக பருத்தி உற்பத்தி, பின்னால் ஆடை உற்பத்தியில் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது. பல கோடி மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் இந்த பருத்தி தொழில் இன்று நலிவடைந்துள்ளது பருத்தி லாபம் அதை விளைவிப்பவர்களுக்கு   செல்லாமல் இடைத்தரகர்களுக்கு செல்கிறது. முதலாளிகள் பதுக்கல் காரணமாக உற்பத்தி விலை கூடி, நூல் விலை  எட்டாத உயரத்திற்குச் சென்றுள்ளது. இதனால் பல தொழிற்சாலைகள் மூடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அதன் தொழிலாளர்கள் பட்டினியால் முழங்கும் அவலநிலை தொடர்கிறது. இதனை கண்டும் காணாமல் இருக்கும் மத்திய மாநில அரசுகளை தேமுதிக மிக வன்மையாக கண்டிக்கிறது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நான்காவது தீர்மானமாக,

திமுக அரசு என்றாலே மின்வெட்டு தான் தமிழக மக்களுக்கு நினைவுக்கு வருகிறது. அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக விவசாயத் தொழில்கள் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் நாட்டின் பொருளாதாரம் கேள்விக்குறியாக்கப் படுகிறது. பள்ளி கல்லூரி மாணவர்கள் தேர்வுக்கு தயாராகும் நிலையில் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கின்றனர், இந்நிலைமையை தேமுதிக வன்மையாக கண்டிக்கிறது. மின்வெட்டுக்கான காரணத்தை அறிந்து அதன் குறைபாடுகளை நீக்கி தமிழகத்தை மின் மிகை மாநிலமாக மாற்றி தமிழக மக்களையும் மாணவர்களையும் இவற்றில் இருந்து காப்பாற்றிட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துவதாக அதில் கூறப்பட்டுள்ளது. 

இதேபொல், தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை , கொலை , கொள்ளை போன்ற சம்பவங்கள் நடக்காமல் தமிழகத்தை அமைதிப் பூங்காவாக காப்பது , பெட்ரோல் , டீசல் என அனைத்து விலைவாசி உயர்வையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து , தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றிட தேமுதிக வலியுறுத்துகிறது என்றும் 4 வது  தீர்மானத்தில் வலியுற்த்தப்பட்டுள்ளது. 
 

click me!