தெளிய, தெளிய வச்சு அடிச்சாருல்ல... ஆசையில் மண்ணை அள்ளிப்போட்டா கோபம் வரத்தானே செய்யும்! ராமதாசை ராவா கலாய்க்கும் திமுகவினர்...

By sathish kFirst Published Jun 11, 2019, 11:57 AM IST
Highlights

மகனை ஜெயிக்க வைத்து மந்திரி ஆக்கி அழகு பார்க்க ஆசைப்பட்டார். அந்த ஆசையில் மண்ணை அள்ளிப்போட்ட ஸ்டாலின் மீது கோபம் வரத்தானே செய்யும் என பாமக நிறுவனர் ராமதாஸின் உரையாடல் பதிவிற்கு கலாய்த்து வருகின்றனர் திமுகவினர்.

மகனை ஜெயிக்க வைத்து மந்திரி ஆக்கி அழகு பார்க்க ஆசைப்பட்டார். அந்த ஆசையில் மண்ணை அள்ளிப்போட்ட ஸ்டாலின் மீது கோபம் வரத்தானே செய்யும் என பாமக நிறுவனர் ராமதாஸின் உரையாடல் பதிவிற்கு கலாய்த்து வருகின்றனர் திமுகவினர்.

சீதா பாட்டி, ராதாப்பாட்டியும் உரையாடுவதைப்போல அமைக்கப்பட்டுள்ள இந்த கதையில் ஸ்டாலின் முதல்வராவது போல கனவுகண்ட ராதாபாட்டிக்கு சீதா பாட்டி பதிலளிப்பது போலவும் கலாய்த்து பேசிக்கொள்வது போல ஒரு பதிவைப்போட்டு, ஸ்டாலினை படு மோசமாக கேலி செய்து எழுதியுள்ளார். 

ராமதாஸின் இந்த கருத்துக்கு அவர் பதிவிட்டுள்ள பக்கத்திலேயே பதிலடி கொடுத்து வருகின்றனர்.  

அந்த பதிவில்; நீங்க சொல்றதெல்லாம் சரிதான். ஆனால் நாளொருமேனியும், பொழுதொரு மேனியாய் அதிமுகவையும், பாஜகவையும் குறை சொல்லி விட்டு, தமிழக நலன்களுக்கு எதிராக செயல்படுவர்களுடன் கூட்டணி வைத்த நீங்கள் கூறுவது வினோதமாக உள்ளது.

ஏழு தொகுதியிலும் மாங்காவை பிதுக்கி எறிஞ்சாச்சு, ஒரு சாதாரண வேட்பாளரை நிறுத்தி ராமதாஸ் மகனை மண்ண கவ்வ வச்சாச்சு, ரவிக்குமார் கூட இப்ப எம்பி, ஆனா உங்க  மகன் அன்புமணி போன சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளரிடம் தோல்வி, இப்போதும் திமுக வேட்பாளரிடம் நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி ஆக, தெளிய வச்சு, தெளிய வச்சு அன்புமணிய விரட்டி விரட்டி அடிச்சாச்சு, இப்பவும் பாஜக கண்ணசைவிற்க்கு திமுக ஒத்துகொண்டால் போதும் எடப்பாடி பழனிச்சாமி அடுத்த நிமிடமே வீட்டுக்கு போயிடுவாரு.

எங்களுக்கு வேணாம், நாடாளுமன்ற தேர்தல் வெற்றி மாதிரி ஒரு மிகப்பெரிய வரலாற்று!! சிறப்புமிக்க வெற்றியை பெற்று எங்க தளபதீதீதீ, அரியணை ஏறுவார் எங்க தளபதீதீதீ!! பதவிக்காக ஏங்குபவர் அல்ல அவர்... அவர் எல்லா பதவியையும் பார்த்து விட்டார்.

இன்று தலைவரா பொறுப்பேற்று திமுகவை நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக ஆக்கி வரலாற்று சாதனை செய்து விட்டார் எங்கள் தளபதி. மிகப்பெரிய எதிர் கட்சி தலைவராக கெத்தா, கொத்தாக சட்டமன்றத்தில் அமர்ந்து உள்ளார்.

இதேபோல ஒரு வரலாற்று வெற்றியை சட்டமன்ற தேர்தலில் பெறுவார் கெத்தா, முதல்வர் நாற்காலியில் அமருவார். ஆமா, உங்க மகன் அடுத்து வரும் கவுன்சிலர் தேர்தலிலாவது வெற்றி பெருவாரா? அதுதான் முடியாது...

உண்மையாவே உங்களை யெல்லாம் பார்த்தா பரிதாபமா இருக்கு வேர வழியே இல்லை இதுமாரி யதாவது பதிவுபோட்டு Like வருமானு வெறிக்க வெறிக்க பாத்துகிட்டு இருக்கவேண்டிதுதான்.

மாற்றம் முன்னேற்றம் ஏமாற்றம் இதை விட கேவலம் என்ன இருக்கு நீங்கள் எழுதிய கதை. நாங்களும் ஏதோ மருத்துவர் அவர்கள் நல்ல அரசியல்வாதி என்று தான் எண்ணினோம். ஆனால், சினிமா காமெடி நடிகர் வடிவேலுவை விட நீங்கள் அரசியலில் காமெடி பண்ண ஆரம்பித்து விட்டீர்கள்.  

click me!