டி.டி.வி. கூடாராம் டோட்டல் வாஷ் அவுட்... முன்னாள் அமைச்சர் அதிமுகவில் ஐக்கியம்..!

By vinoth kumarFirst Published Jun 11, 2019, 11:21 AM IST
Highlights

மறைந்த திமுக முன்னாள் அமைச்சரான தாமரைக்கனியின் மகனும் முன்னாள் அமைச்சருமான இன்பத்தமிழன் அமமுகவில் இருந்து விலகி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் ஐக்கியமாகி உள்ளார். 

மறைந்த தாமரைக்கனியின் மகனும் முன்னாள் அமைச்சருமான இன்பத்தமிழன் அமமுகவில் இருந்து விலகி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் ஐக்கியமாகி உள்ளார். 

தமிழத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலிலும், 22 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலிலும் அமமுக ஒரு தொகுதிகளிலும் வெற்றி பெறவில்லை. பல இடங்களில் அமமுக வேட்பாளர்கள் டெபாசிட் கூட பெறவில்லை. இதையடுத்து அமமுக நிர்வாகிகள் அதிருப்பதியில் இருந்து வந்தனர். இந்நிலையில் அமமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் தாய் கழகமான அதிமுகவில் இணைந்து வருகின்றனர். 

இதனிடையே டிடிவி.தினகரனின் மிகவும் நெருங்கிய நெல்லை மாவட்ட செயலாளர் பாப்புலர் முத்தையா மற்றும் நெல்லை மக்களவை தொகுதி வேட்பாளர் மைக்கேல் ராயப்பன், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ஜி.சின்னதுரை மற்றும் திருவண்ணாமலை, தருமபுரியை சேர்ந்த நிர்வாகிகள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் தாய் கழகத்தில் இணைந்தனர். 

இந்நிலையில் மறைந்த தாமரைக்கனியின் மகனும் முன்னாள் அமைச்சருமான இன்பத்தமிழன் அமமுகவில் இருந்து விலகி இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். 

கடந்த 2001-ம் ஆண்டு தேர்தலில் அதிமுக சார்பில், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வான இன்பத்தமிழன் அமைச்சரானார். அந்தத் தேர்தலில் தந்தை தாமரைக்கனிக்கு எதிராக மகன் இன்பத்தமிழனை ஜெயலலிதா களத்தில் இறக்கினார். பின்னர் வழக்கம்போல் இவரையும் ஜெயலலிதா ஒதுக்கவே கடந்த 2006-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின், திமுகவில் இணைந்தார். திமுகவில் இருந்து விலகி மீண்டும் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். பின்னர் அதிமுகவில் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக டிடிவி.தினகரன் அணியில் இருந்த வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். 

click me!