மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளர் திமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கம்.. மு.க.ஸ்டாலின் அதிரடி..!

By vinoth kumarFirst Published Apr 2, 2020, 1:09 PM IST
Highlights

அவரது அறிக்கை கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அடுத்த 24 மணிநேரத்தில் திமுக விவசாய அணி மாநில செயலாளர் டாக்டர் கே.பி.ராமலிங்கம் , அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவதாக கடந்த 2 நாட்களுக்கு முன்னர் திமுக தலைமை அறிவித்தது. ஆனாலும் தொடர்ந்து கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் நீடித்து வந்தார்.

திமுக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும்  மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளரும் முன்னாள் எம்.பி.யுமான கே.பி.ராமலிங்கம் தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுவதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க வீடியோ கான்பரன்ஸ் மூலம் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், அறிக்கை ஒன்றை வெளியிட்ட கே.பி.ராமலிங்கம், அனைத்துக்கட்சி கூட்டம் தேவையில்லாதது என்றும், 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை கூட்ட வேண்டும் என வலியுறுத்தக் கூடாது என்றும் வலியுறுத்தினார். 

மேலும், கொரோனா' வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்ற, பிரதமரும், முதல்வரும் சிறப்பாக செயல்படுகின்றனர். இன்றைய சூழலில் மக்கள் நலன் கருதி, வேளாண் பணிகளுக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு அளித்திருப்பது, முதல்வரின் ஆளுமை திறனை காட்டுகிறது. அனைத்து தமிழக விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டுகிறோம் என்று கூறியிருந்தார். 

அவரது அறிக்கை கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அடுத்த 24 மணிநேரத்தில் திமுக விவசாய அணி மாநில செயலாளர் டாக்டர் கே.பி.ராமலிங்கம் , அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவதாக கடந்த 2 நாட்களுக்கு முன்னர் திமுக தலைமை அறிவித்தது. ஆனாலும் தொடர்ந்து கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் நீடித்து வந்தார்.

இந்நிலையில், திமுக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் தற்காலிகமாக நீக்கப்படுவதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தற்போது நீக்கப்பட்டுள்ள கே.பி.ராமலிங்கம் மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!