இந்தியாவின் நாடி நரம்பை ஆடிப்போக வைத்த ஒரே ஒரு ஜமாத் மாநாடு... அணுகுண்டை விட மோசமான அபாயம்..!

By Thiraviaraj RMFirst Published Apr 2, 2020, 12:04 PM IST
Highlights

ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்ட 9000 பேருக்கு கொரோனா தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் அவர்களில் 7,688 உள்ளூர் நபர்களை கண்டறிந்து தனிமைப்படுத்த அனைத்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். 

டெல்லி, நிஜாமுதீன் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்ட 9000 பேருக்கு கொரோனா தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் அவர்களில் 7,688 உள்ளூர் நபர்களை கண்டறிந்து தனிமைப்படுத்த அனைத்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். 

மார்ச் மாதம்  டெல்லியில் இஸ்லாமிய அமைப்பு ஒன்று, ஜமாத் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த மாநாட்டில் சுமார் தமிழகம், தெலங்கானா உட்பட 7600 இந்தியர்கள், 1300 வெளிநாட்டினர் கலந்து கொண்டதாகவும் கூறப்பட்டது. தற்போது இந்த மாநாடு நிக்ழந்த இடமே இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் ஹாட்ஸ்பாட்டாக உருவெடுத்துள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த புதன்கிழமை தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க கூடும் எனக் கூறப்படுகிறது.

 

டெல்லி நிஜாமுதீன் மேற்கு பகுதியில் உள்ள இந்த இடம் கொரோனா தொற்றின் அதிக ஆபத்தை கொண்டிருப்பதால் பிற நாடுகளைச் சேர்ந்த 1,306 உறுப்பினர்களை அடையாளம் காண இருபத்தி மூன்று மாநிலங்களும் நான்கு யூனியன் பிரதேசங்களும் உஷார் படுத்தப்பட்டுள்ளன. ஏப்ரல் 1ம் தேதி வரை உள்துறை அமைச்சகத்தால் சேகரிக்கப்பட்ட தகவலின்படி, சுமார் 1,051 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர், அதில் 21 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவர் இறந்துள்ளனர்.

தப்லீஜி ஜமாஅத்தில் பங்கேற்ற 7,688 உள்ளூர் நபர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்த எல்லா முயற்சிகளையும் எடுத்துவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். "இந்த நிகழ்வு குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும், ஏப்ரல் 1 ஆம் தேதி வரை, பெரும்பாலான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பங்கேற்றாளர்களை அடையாளம் காண முடிந்துள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த குழுவில் பங்கேற்ற சுமார் 400 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் அதிகபட்சமாக தமிழகத்தில் 190 பேர், ஆந்திராவில் 71 பேர், டெல்லியில் 53 பேர், தெலுங்கானாவில் 28 பேர், அசாமில் 13 பேர், மகாராஷ்டிராவில் 12 பேர், அந்தமான் 10 பேர், ஜம்மு-காஷ்மீரில் ஆறு பேர், புதுச்சேரி மற்றும் குஜராத்தில் தலா இரண்டு பேர். 

மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் இருந்தும் மற்றும் இந்தியா முழுவதிலும் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் கடந்த மாதம் நிஜாமுதீனில் ஒரு குறுகிய பாதையின் வழியாக சென்று தப்லிகி ஜமாஅத்தின் தலைமையகத்தை பார்வையிட்டனர். அவர்கள் பல நாட்கள் பிரார்த்தனை மற்றும் சொற்பொழிவுகளில் பங்கேற்றுள்ளனர். நாடு முழுவதும் பூட்டப்பட்டதால் பொது போக்குவரத்து மற்றும் அனைத்து இயக்கங்களும் நிறுத்தப்படாததால், கூட்டம் முடிந்ததும், மற்றவர்கள் நகரத்தை விட்டு வெளியேறிய நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் மார்க்காஸ் மற்றும் மையத்தின் அருகில் உள்ள தங்குமிடங்களுக்குள் சிக்கித் தவித்ததாக தப்லிகி ஜமாஅத் கூறினர். 

click me!