
கொடிய புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய போதைப்பொருளான குட்காவை தமிழகத்தில் சுதந்திரமாக விற்பதற்கு மாதா மாதாம் மாமுல் வாங்கப்பட்டதைவிட மானக்கேடு தமிழ்நாட்டுக்கு வந்துவிடப்போவதில்லை என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
கோவை மாவட்டம் சூலூர் - கண்ணம் பாளையத்தில் இயங்கி வந்த குட்கா ஆலை விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்து வருகிறது. ஆலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய திமுக நிர்வாகிகள் 7 பேரை போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். திமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கோவையில் இன்று மு.க.ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. கோவை செஞ்சிலுவை சங்கம் அருகே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், குட்கா பிரச்சனைக்காக திமுக போராட்டம் நடத்த முன்வந்திருக்கிறது என்றால் இந்த பகுதி மக்களுக்காக மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழக மக்களுக்காக இந்த போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது என்றார்.
கோவை குட்கா ஆலையில் நடத்தப்பட்ட சோதனை எதற்கு நடந்தது என்றால், அனுமதி பெறாத நிலையில், ஏற்கனவே தடை செய்யப்பட்ட குட்காவை, ஆலையில் சோதனை நடத்தியிருக்கிறார்கள். திடீரென்று இந்த குட்கா ஆலையை அடைக்க வேண்டும்? இந்த அவசியம் ஏன்வந்திருக்கிறது என்றால், ஏற்கனவே குட்கா பிரச்சனை என்பது பூதாகரமாக உள்ளது. இதற்கு சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இந்த நிலையில் குட்கா விவகாரத்தை திசை திருப்ப வேண்டும் என்பதற்காக கோவை குட்கா குடோனில் 18 மணி நேரம் சோதனை நடத்தி உள்ளது. இதன் மூலம் திமுக மீது பழி சுமத்த வேண்டும் என்பதற்காக நியாயமான சோதனை நடைபெற வேண்டும் என்ற உண்மையை மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும்.
அதற்காக ஜனநாயக முறையில் ஆர்ப்பாட்டமும் திமுகவினர் நடத்தியிருக்கிறார்கள். ஆனால் நியாயம் கேட்க சென்ற அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, இரவோடு இரவாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நியாயத்தை மூடி மறைக்க வேண்டும் என்று திட்டமிடுபவர்களுக்க பதிலடி தரக்கூடிய வகையில்தான் இந்த ஆர்ப்பாட்டம் நடத்த முன்வந்திருக்கிறோம் என்றார்.
கோவை மாவட்ட கண்காணிப்பாளராக இருக்கக்கூடிய மூர்த்தி ஐபிஎஸ், இன்றைக்கு அரசின் ஆணைக்கும் அமைச்சர்களின் ஆணைக்கும் கட்டுப்பட்டு சில சதி வலைகளைப் பிண்ணி நம் மீது அபாண்டத்தை சுமக்க வேண்டும் என்பதற்காக பல வழக்குகளை போட்டிருக்கிறார்கள். ஆளுங்கட்சிக்கு பயந்து பல வழக்குகளைப் போட்டிருக்கலாம். நாளை திமுகவுக்கு பதில் சொல்லியே தீர வேண்டும்.
தமிழ்நாட்டுக்கு வந்துவிடப் போவதில்லை என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.