
பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழத்தைச் சேர்ந்தவர் என்பது அனைவருக்கும் தெரிந்த நிலையில் , கர்நாடக மாநில தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு அவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர்' என பிரதமர் மோடி பிரசார கூட்டத்தில் பேசியுள்ளதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கர்நாடகாவில், வரும் 12 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் பம்பரமாக சுற்றி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் ஒருவருக்கொருவர் குற்றம் மற்றும் குறைகளை கண்டுபிடித்து தாக்கி பேசி வருகின்றனர். குறிப்பாக ராகுல் காந்தியை அமித்ஷாவும், மோடியை ராகுல் காந்தியும் செமையாக கலாய்த்து வருகினறனர்
காங்கிரஸ், பா.ஜ.க என இரு கட்சிகளும் தங்களின் பலத்தை நிரூபிக்க கடும் போட்டி போட்டு வருகின்றன. அங்கு நடக்கும் பிரசார கூட்டத்தில், இந்த இரு கட்சிகளுக்குமிடையே வார்த்தைப் போர் நடந்துவருகிறது.
பா.ஜ.க காங்கிரஸையும், காங்கிரஸ் பா.ஜ.க-வையும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். இந்நிலையில் பிரதமர் மோடி கர்நாடகாவில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். “
அப்போது பேசிய அவர், கர்நாடகாவில் பெண்களுக்கு பாதுகாப்பு மிகவும் குறைந்துள்ளது. ஆனால் பா.ஜ.க அரசு பெண்களுக்கு எப்போதும் முன்னுரிமை வழங்கும். அதனால்தான் கர்நாடகாவைச் சேர்ந்த நிர்மலா சீதாராமனை இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சராக நியமித்துள்ளதாக தெரிவித்தார்.
ஆனால் பாதுகப்புத்துறை அமைச்சர் தமிழ்நாடு திருச்சியைச் சேந்தவர் என்பது அனைவருக்கும் தெரியும். இதற்கு கண்டனம் தெரிவித்ததுள்ள நெட்டிசன்கள், தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமனை கர்நாடகாவைச் சேர்ந்தவர் என ஓட்டுக்காக மோடி பொய் செல்லுவதாக குறிப்பிட்டுள்ளனர்.
மோடியின் இந்தப் பேச்சுக்கு கன்னட அமைப்பினரிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதை வைத்து சமூக வலைதளங்களில் பலரும் மோடியை கலாய்த்துவருகிறார்கள்.