
தூத்துக்குடியில் மக்கள் போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் அரசு 144 தடை உத்தரவையும் அமலில் வைத்திருந்த்து. தூத்துக்குடியில் நடந்த படுகொலையை கண்டித்து பலரும் தமிழகம் முழுக்க போராட்டம் நடத்தி வருகின்றனர்.
திமுக தலைமையில் அனைத்துக்கட்சிகளும் இன்று கடையடைப்பு மற்றும் சாலைமறியலில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரழந்துள்ளன்ர். இதனை கண்டித்து எதிர்கட்சிகள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வலியுறுத்தியும் அங்கு பொறுப்பில் இருந்த காவல்துறை மற்றும் ஆட்சியர் பதவி விலக கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டை எடப்பாடி அரசு எந்த வகையிலும் நியாப்படுத்த கூடாதென கனிமொழி தன் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.