ஒரு களவானி இன்னொரு களவானியை வெல்வது எப்படி தர்மயுத்தமாகும்? ஓ.பி.எஸை கலாய்த்த கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

First Published Apr 20, 2017, 1:34 PM IST
Highlights
DMK PRO K.S.Radhakrishnan comments against OPS On his Facebook page


'நீதிமன்றத்தில் இரட்டை இலையை மீட்டுவிட்டு, தர்மத்தின் வெற்றி என்கிறாரா?' என்று பன்னீர்செல்வத்தை கலாய்த்துள்ள தி.மு.க செய்தித் தொடர்பாளர், வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ''ஒரு களவாணி இன்னொரு களவாணியை வென்றது எப்படி தர்மயுத்தத்தின் வெற்றியாகும்...'' என கொந்தளித்துள்ளார்.

தி.மு.க செய்தித் தொடர்பாளர், வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தமது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது; ஒரு களவானி இன்னொரு களவானியை வெல்வது எப்படி தர்மயுத்தமாகும்? சபாஸ் சரியான கேள்வி.

தர்மயுத்தத்தின் முதல் வெற்றி என ஓ.பன்னீர்செலவத்தின் கொக்கரிப்பை ஊடகங்கள் வாயிலாக காண நேர்ந்தது. அத்தனை அநியாயத்தையும் அக்கிரமங்களையும் செய்த ஜெயலலிதா, சட்டத்தின் பிடியில் மாட்டிக் கொண்ட போதெல்லாம் " தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், முடிவில் தர்மமே வெல்லும் "என்பார். அவரின் அடிவருடி பன்னீர்செல்வத்திற்கு தர்மம் என்றால் என்னவென்று எப்படி தெரியும்? ஆங்கிலத்தில் சைலண்ட் ப்ரொனவுன்ஷேஷன் என்பார்களே அப்படித்தான் அவர்கள் அதர்மத்தை, தர்மம் என உச்சரித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

நீதிமன்றத்தில் இரட்டை இலையை மீட்டு விட்டு தர்மத்தின் வெற்றி என்கிறாரா?

கச்சத்தீவை மீட்டுவிட்டு தர்மயுத்தத்தின் வெற்றி என்கின்றாரா? 
விவசாயிகளின் பிரச்சனையை கையில் எடுத்து உச்சநீதி மன்றத்தில் வென்றுவிட்டு தர்மயுத்தத்தின் வெற்றி என்கின்றாரா? 

மத்திய அரசு நீட் தேர்வை, இந்தியை திணிக்கின்றதே, அதனை தடுத்து சமூகநீதி நிலைநாட்டி விட்டு தர்மயுத்தத்தின் வெற்றி என்கின்றாரா?

ஒரு களவானி இன்னொரு களவானியை வென்றது எப்படி தர்மயுத்தத்தின் வெற்றியாகும்? காப்பியங்களிலும், புராணங்களிலும் புனிதமாக உச்சரிக்கப்பட்ட தர்மம் என்ற சொல் இவர்களால் களங்கப்பட்டுள்ளது. என இவ்வாறு தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

click me!