DMK, பாமகவெல்லாம் எனக்கு ஜுஜுபி... என் எதிரிகள் இவர்களைவிட பல லட்சம் மடங்கு வலிமையானவர்கள்: திகு திகு திருமா

Published : Nov 23, 2021, 10:45 AM ISTUpdated : Nov 23, 2021, 11:01 AM IST
DMK, பாமகவெல்லாம் எனக்கு ஜுஜுபி... என் எதிரிகள் இவர்களைவிட பல லட்சம் மடங்கு வலிமையானவர்கள்: திகு திகு திருமா

சுருக்கம்

நான் சந்திக்க வேண்டிய எதிரிகள் இவர்கள் விட பல லட்சம் மடங்கு ரொம்ப வலிமையானவர்கள். 

திமுக, பாமகவெல்லாம் எனக்கு ஜுஜுபி... என் எதிரிகள் இவர்களை விட பல லட்சம் மடங்கு வலிமையானவர்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், ‘’நாங்கள் பயணிக்க வேண்டிய தூரம் ரொம்ப தூரம் இருக்கிறது. நான் சந்திக்க வேண்டிய எதிரிகள் இவர்கள் விட பல லட்சம் மடங்கு ரொம்ப வலிமையானவர்கள். சங்பரிவார்களை எதிர்கொள்வது இந்தியாவில் சாதாரண விஷயம் கிடையாது. 

பாமகவை எதிர்கொள்வது திமுகவை எதிர்கொள்வது ரொம்ப ஜுஜுபி. ஏனென்றால் அவர்கள் எல்லாம் சராசரி அரசியல் கட்சிகள். திமுகவோ, அதிமுகவோ, இடதுசாரிகளோ சராசரி கட்சிகள். ஏனென்றால் அவர்கள் கொள்கைகளை வைத்து அரசியல் செய்து விட்டு போய் விடுவார்கள். ஆனால் பிஜேபி, ஆர்எஸ்எஸ் என்பது அவர்களைப் போல சாதாரண அரசியல் கட்சி கிடையாது. அவர்கள் 100 ஆண்டுகால செயல்திட்டங்களை முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுபவர்கள். 

வேளாண் சட்டத் திருத்தம் ரத்து செய்யப்பட்டதை எந்த அரசியல் கட்சிகளும் சொந்தம் கொண்டாட முடியாது. இது விவசாயிகளின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி’’ என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

அவரது இந்த கருத்து அரசியல் களத்தில் கவனிக்கத் தக்கதாக மாறியுள்ளது. வேளான் சட்ட திருத்தம் ரத்து செய்யப்பட்டதற்கு திமுக கொடுத்த அழுத்தம் மிக முக்கியமானது என உடன்பிறப்புகள் சமூகவலைதளங்களில் பெருமை கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் திருமாவளவன் இதுபோன்ற கருத்தை வெளியிட்டு வருவது திமுகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. வேளாண் சட்டத்திருத்தம் ரத்து செய்யப்பட்டதற்காக வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பிரதமராகும் வாய்ப்பு கூட இருக்கிறது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் திருமாவளவன் இது போராட்டம் நடத்திய விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி. யாரும் இதில் பங்குபெற முடியாது என்று தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியின் அங்கம் வகிக்கிறது. இருப்பினும் திமுகவை பற்றி திருமாவளவன் கூறி வரும் கருத்துக்கள் உடன்பிறப்புகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நாளை தவெக வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்..! டெல்டாவை தட்டி தூக்க பக்கா ஸ்கெட்ச்
ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!