திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மகன் பாஜகவில் இணைந்த விவகாரம்.. ஒரே வரியில் கருத்து சொன்ன டி.ஆர்.பாலு.!

Published : May 09, 2022, 11:25 AM IST
திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மகன் பாஜகவில் இணைந்த விவகாரம்.. ஒரே வரியில் கருத்து சொன்ன டி.ஆர்.பாலு.!

சுருக்கம்

திமுகவின் கொள்கைப் பரப்பு செயலாளராக உள்ள திருச்சி சிவா திமுகவின் மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார். இவரது மகன் சூர்யா கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்து, நேர்காணலில் பங்கேற்றார். ஆனால், சூர்யாவுக்கு, திமுக தலைமை சீட் கொடுக்கவில்லை. இதனால், சூர்யா அதிருப்தியில் இருந்தார். 

திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மகன் சூர்யா பாஜக மாநிலதத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்த சம்பவம் திமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவின் கொள்கைப் பரப்பு செயலாளராக உள்ள திருச்சி சிவா திமுகவின் மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார். இவரது மகன் சூர்யா கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்து, நேர்காணலில் பங்கேற்றார். ஆனால், சூர்யாவுக்கு, திமுக தலைமை சீட் கொடுக்கவில்லை. இதனால், சூர்யா அதிருப்தியில் இருந்தார். 

இந்நிலையில், சூர்யா நேற்று  திமுகவில் இருந்து பாஜக மாநிலதத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். அப்போது அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர். அவருக்கு சால்வை அணிவித்த அண்ணாமலை, கட்சியில் இணைந்ததற்கான உறுப்பினர் அட்டையையும் வழங்கினார். ஆளுங்கட்சியை சேர்ந்த எம்.பி.யின் மகன் பாஜகவில் இணைந்த சம்பவம் திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மகன் சூர்யா பாஜகவில் இணைந்தது குறித்து திமுக மூத்த எம்.பி. டி.ஆர்.பாலுவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, திமுகவில் இருந்து விலகி பலர் மாற்று கட்சிகளில் இணைகிறார்கள். அது போன்றுதான் இதுவும் என கருத்து தெரிவித்துள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

செந்தில் பாலாஜிக்கு பெரும் நிம்மதி..! உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு..! முழு விவரம்!
வெண்டிலேட்டடிரிலும் வீராப்பு காட்டும் காங்கிரஸ்..! போக்கிடமின்றி துர்பாக்கியத்தில் மாநிலக் கட்சிகள்..! சுக்குநூறாக உடையும் இண்டியா கூட்டணி..!