தமிழகத்தில் பெண் உரிமை மிரட்டபடுகிறது. சமூக நீதி மறுக்கபடுகிறது. தற்காலிக வெற்றி என நம்பும் #கோழைகளிடம் கேட்கிறேன். #தைரியம் இருந்தால் இளமதியை தனியாக press meet அனுப்புங்க. அப்போ உங்க முகத்திரை கிழிந்து,சாயம் வெளுக்கும் அதை கண்ணாடியில் பார்த்து ரசித்து சிரித்து கொள்ளுங்கள்.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த கவுந்தபாடியை சேர்ந்தவர் செல்வன். இவரும் குருப்பநாய்க்கம்பாளையம் பகுதியில் வசிக்கும் இளமதி என்கிற பெண்ணும் காதலித்து வந்தனர். இருவரும் வேறு வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு நிலவிய நிலையில் சேலம் மாவட்டம் காவலாண்டியூரில் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் இருவருக்கும் சுயமரியாதை திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. அப்போது அங்கு வந்த 40-க்கும் மேற்பட்டோர், திருமணம் செய்து வைத்த திராவிடர் விடுதலை கழக பிரமுகர் ஈஸ்வரன் மற்றும் காதல் ஜோடியை கடுமையாக தாக்கி, காரில் கடத்தி சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர், விரைந்து சென்று ஈஸ்வரன் மற்றும் காதலர் செல்வனை மீட்டனர். காதலி இளமதியை மீட்கும் முயற்சியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் சேலம் மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இளமதி ஆஜரானார். தனது வழக்கறிஞர் சரவணன் உடன் ஆஜரான அவர் பெற்றோர் உடன் செல்ல விரும்புவதாக கூறியுள்ளார். இது செல்வன் தரப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சிலரின் அச்சுறுத்தல் காரணமாகவே இளமதி பெற்றோருடன் செல்ல விருப்பம் தெரிவித்தாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இளமதி கடத்தப்பட்டது தொடர்பாக தருமபுரி திமுக எம்.பி செந்தில்குமார் பாராளுமன்றத்தில் பேசியிருந்தார். தற்போது இளமதியின் முடிவு குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் அவர், இளமதியை தனியாக பத்திரிக்கையாளர்களை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
தமிழகத்தில் பெண் உரிமை மிரட்டபடுகிறது.,
சமூக நீதி மறுக்கபடுகிறது
தற்காலிக வெற்றி என நம்பும் கேட்கிறேன். இருந்தால் இளமதியை தனியாக press meet அனுப்புங்க. அப்போ உங்க முகத்திரை கிழிந்து,சாயம் வெளுக்கும் அதை கண்ணாடியில் பார்த்து ரசித்து சிரித்து கொள்ளுங்கள்.😡
அவரது பதிவில், 'தமிழகத்தில் பெண் உரிமை மிரட்டபடுகிறது. சமூக நீதி மறுக்கபடுகிறது. தற்காலிக வெற்றி என நம்பும் #கோழைகளிடம் கேட்கிறேன். #தைரியம் இருந்தால் இளமதியை தனியாக press meet அனுப்புங்க. அப்போ உங்க முகத்திரை கிழிந்து,சாயம் வெளுக்கும் அதை கண்ணாடியில் பார்த்து ரசித்து சிரித்து கொள்ளுங்கள்’ என்று தெரிவித்திருக்கிறார்.