தாழ்த்தப்பட்ட மக்களை கொச்சைப்படுத்துவதா.??? தயா , டி.ஆர் பாலு கொடும்பாவி எரிப்பு... வெடிக்கும் எதிர்ப்பு..!!

By Ezhilarasan Babu  |  First Published May 15, 2020, 1:03 PM IST

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலு மற்றும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோரை கண்டித்து அய்யப்பாக்கம் பகுதியில் சமூக ஆர்வலர்கள்  ஐந்து பேர் சேர்ந்து அவர்களது உருவ படத்தை எரித்து தங்கள் எதிர்ப்பைவெளிப்படுத்தியுள்ளனர்


தாழ்த்தப்பட்ட மக்களை இழிவு படுத்துவதாக பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மற்றும் அவருடன் நின்று அதை வேடிக்கைப் பார்த்த  ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி .ஆர் பாலு ஆகியோரைக் கண்டித்து அயப்பாக்கம் பகுதியில் சமூக ஆர்வலர்கள் சிலர் அவர்களது உருவ பொம்மைகளை எதிர்த்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர் .  இந்த சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ,  திமுக எம்பிக்கள் தயாநிதிமாறன் டி. ஆர் பாலு ஆகியோர் திமுவின் " ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் " பெறப்பட்ட மனுக்களை தலைமைச் செயலாளரை சந்தித்து வழங்கினார் ,  இந்த மனுக்களை கொடுத்து விட்டு வெளியே வந்த அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தபோது ,  அங்கு பேசிய தயாநிதி மாறன் தலைமைச் செயலாளர் எங்களை மூன்றாம் தர மக்கள் போல் நடத்தினார் .  நாங்கள் என்ன தாழ்த்தப்பட்ட ஆட்களா எனக்கூறி கோபத்தை வெளிப்படுத்தினார்.  தயாநிதிமாறன் செய்தியாளர்கள் மத்தியில் இப்படி பேசியது பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது .

Latest Videos

இந்நிலையில் இது குறித்து தெரிவித்த திமுகவின் கூட்டணி கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் , தலைமைச் செயலாளர் குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியது  சரி ,  ஆனால் அந்த வேகத்திலேயே நாங்கள் தாழ்த்தப்பட்டவர்களா என்றது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது .  அதில் ஏதும் உள்நோக்கம் இல்லை என்றாலும் ,  அவரின் பேச்சு இந்த மண்ணின் மைந்தர்களின் உள்ளத்தை பாதித்திருக்கிறது  இது தோழமைக் கட்சியின் சுட்டுதல் என தனது ஆதங்கத்தை சொல்லமுடியாமல் வெளிப்படுத்தினார் .  இது குறித்து தெரிவித்த  தலித் மக்களுக்கான சமூக செயற்பாட்டாளர் எவிடன்ஸ் கதிர் ,  " ஒருவர் ஆதிதிராவிட மக்களுக்கு நாங்கள் போட்ட பிச்சை எடுக்கிறார் " இன்னொருவர் நாங்கள் என்ன தாழ்த்தப்பட்ட மக்களா என்கிறார் . திமுகவினருக்கு  சமத்துவம் குறித்தும் ,  மாண்பு குறித்தும் அண்ணல் அம்பேத்கர் குறித்தும் அவசியம் பயிற்சி தேவை என அக்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு வலியுறுத்தியுள்ளார் . 

undefined

தயாநிதி மாறனின் இந்த பேச்சை பாரதிய ஜனதா கட்சி மிக கடுமையாக விமர்சித்துள்ளது ,  அதாவது திமுக தொடர்ந்து தலித் மக்களுக்கு எதிராக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது ,  தயாநிதி மாறனின் இந்த பேச்சு ஒட்டுமொத்த பட்டியலின சமுதாயத்தை மட்டுமல்லாமல் தமிழக மக்கள் அனைவரையும் அவமானப்படுத்தி உள்ளது ,   தலைகுனிய வைத்துள்ளது ,  கடந்த 2017 ஆம் ஆண்டு  தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால் அவர்களை திமுக உறுப்பினர்கள் அவரது இருக்கையில் இருந்து அகற்றியதையும் அவரை வசை பாடி அவரின் சட்டையை கிழித்து அவமானப்படுத்தியதை தமிழக மக்கள் மறந்துவிடவில்லை ,  தான் ஒரு தலித் என்பதால் தான் திமுக தன்னை குறி வைத்து தாக்குகிறது என அவர் கூறியதையும் யாரும் இன்னும் மறக்கவில்லை .  சமீபத்தில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி ஆதிதிராவிடர்களுக்கு நீதிமன்ற பதவி கிடைத்தது திராவிட இயக்கம் போட்ட பிச்சை என தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை அவமானப்படுத்தினார் .  இப்போது ,  நாங்கள் என்ன தாழ்த்தப்பட்ட மக்களா என்றும் பட்டியலின சமுதாயம் மூன்றாம் தர குடிமக்கள் தான் என்ற வன்மத்தோடு சாதிய சிந்தனையோடுதான் தயாநிதிமாறன் பேசுகிறார் என்பதை அவரது  பேச்சில் தெளிவாகிறது என சுட்டிக்காட்டியுள்ள பாஜக , தயாநிதி மாறன் மீது தமிழக காவல்துறை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. 

தமிழகம் முழுவதிலும் இருந்து தயாநிதிமாறனின் பேச்சுக்கு எதிரான கண்டனக்குரல் வலுக்க தொடங்கியுள்ளது,  திமுக தலைவர் ஸ்டாலின் தயாநிதிமாறனை அழைத்து கடுமையாக எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது , இந்நிலையில் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ள , தயாநிதி மாறன் ,  நான் அளித்த பேட்டியின்போது தலைமைச் செயலாளர் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களை தாழ்வான முறையில் நடத்தினார் என்ற அர்த்தத்தில்தான் கூறி இருந்தேனே தவிர ,  எவருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு சிறிதும் இல்லை யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக என்னுடைய ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.இந்நிலையில் , ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலு மற்றும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோரை கண்டித்து அய்யப்பாக்கம் பகுதியில் சமூக ஆர்வலர்கள்  ஐந்து பேர் சேர்ந்து அவர்களது உருவ படத்தை எரித்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

 

நேற்று முன்தினம் தமிழக அரசின் தலைமைச் செயலாளரை சந்தித்த பிறகு எதற்காக தலைமைச் செயலரை சந்தித்தோம் என கூறாமல் செய்தியாளர்கள் சந்திப்பில்  தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தி கேவலமாக பேசிய தயாநிதி மாறன் டி ஆர் பாலுவை மிக வன்மையாகக் கண்டிக்கிறோம் என அவர்கள் முழக்கம் எழுப்பினர் . இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

click me!