கனிமொழி கணவருக்கு திடீர் உடல்நலக்குறைவு.. தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!

By vinoth kumar  |  First Published Mar 13, 2023, 8:15 AM IST

திமுக துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி. இவருடைய கணவர் அரவிந்தன் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். 


திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் கணவர் அரவிந்தன் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

திமுக துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி. இவருடைய கணவர் அரவிந்தன் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். இந்நிலையில், இவருக்கு கடந்த சில நாட்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, தனியார் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்ததில் நுரையீரல் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

Latest Videos

இதையும் படிங்க;- வயிறெரிஞ்சு சொல்கிறேன்.. கொல்லங்குடி காளிக்கு காசுவெட்டி போடுவோம்.. இபிஎஸ்க்கு சாபம் விட்ட மருது அழகுராஜ்.!

இந்த செய்தியை அறிந்த கனிமொழி உடனே சிங்கப்பூர் சென்றுள்ளார்.  அங்கு மருத்துவமனையில் தங்கி தனது கணவர் அரவிந்தன் உடல்நிலையை கனிமொழி மற்றும் அவரது மகனும் உடனிருந்து கவனித்துக்கொள்கின்றனர். அரவிந்தன் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் இன்னும் சில நாட்களில் வீடு திரும்புவார் என கூறப்படுகிறது. அரவிந்தனின் உடல்நிலை குறித்து தங்கை கனிமொழியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது கேட்டறிந்து வருகிறார். 

இதையும் படிங்க;- முதல்வர் கனவில் பலரும் அனாதைகளாக திரிகிறார்கள்.. கோவையில் மாஸ் காட்டிய முதல்வர் மு.க ஸ்டாலின்

click me!