திமுக துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி. இவருடைய கணவர் அரவிந்தன் சிங்கப்பூரில் வசித்து வருகிறார்.
நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக துணைபொதுச்செயலாளர் கனிமொழியின் கணவர் அரவிந்தன் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திமுக துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி. இவருடைய கணவர் அரவிந்தன் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். இந்நிலையில், இவருக்கு கடந்த சில நாட்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதை அடுத்து தனியார் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்ததில் நுரையீரல் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை அங்கேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதையும் படிங்க;- கனிமொழி கணவருக்கு திடீர் உடல்நலக்குறைவு.. தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!
இந்த செய்தியை அறிந்த கனிமொழி உடனே சிங்கப்பூர் சென்றார். அங்கு மருத்துவமனையில் தங்கி தனது கணவர் அரவிந்தன் உடல்நிலையை கனிமொழி மற்றும் அவரது மகனும் உடனிருந்து கவனித்து வந்ததை அடுத்து அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.
இதையும் படிங்க;- நீங்க கால்ல விழுந்த சசிகலாவும், ஜெயலலிதாவும் மீசை வச்சிருந்தாங்களா? ஈபிஎஸ் கருத்துக்கு கனிமொழி பதிலடி!!
இதையடுத்து, தமிழகத்தில் சிகிச்சை அளிப்பதற்காக சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் நேற்று முன்தினம் சென்னை அழைத்து வரப்பட்ட அவரை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று அரவிந்தனின் உடல்நிலை குறித்து கனிமொழியிடமும், மருத்துவர்களிடமும் கேட்டறிந்தார்.