கல்வி கற்கத்தான் குழந்தைகள் பள்ளிக்கு வருகிறார்கள்! கழிப்பறையை சுத்தம் செய்ய அல்ல! கனிமொழி காட்டம்!

Asianet News Tamil  
Published : Nov 30, 2017, 02:50 PM ISTUpdated : Sep 19, 2018, 01:31 AM IST
கல்வி கற்கத்தான் குழந்தைகள் பள்ளிக்கு வருகிறார்கள்! கழிப்பறையை சுத்தம் செய்ய அல்ல! கனிமொழி காட்டம்!

சுருக்கம்

dmk mp kanimozhi condemned

கல்வி கற்கத்தான் குழந்தைகள் பள்ளிக்கு வருகிறார்கள் என்றும் கழிப்பறையை சுத்தம் செய்ய அல்ல என்றும் திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், ம.பொ.சி.நகரில் ஆர்.எம்.ஜெயின் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 6 முதல் 12 வரை உள்ள வகுப்புகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு ஆசிரியர், ஆசிரியைகள் பயன்படுத்த பத்து கழிவறைகள் உள்ளன. அவற்றை தனியார் சுகாதார பணியாளர்கள் மூலமாக சுத்தம் செய்வதற்கு அரசு ரூ.2500 வழங்கி வருகிறது.

இந்த நிலையில் கடந்த 24 ஆம் தேதி முதல் ஒவ்வொரு வகுப்பின் தலைவராகவும், துணைத் தலைவராகவும் உள்ள மாணவிகளை பள்ளியில் உள்ள கழிவறைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்று தலைமை ஆசிரியை கட்டாயப்படுத்தியுள்ளாராம். இதனையடுத்து மாணவிகள் நாள்தோறும் பள்ளியில் உள்ள கழிவறைகளை அழுது கொண்டே, எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல், வெறும் கைகளால் சுத்தம் செய்து வருகின்றனர்.

இது பற்றிய படங்கள் வாட்ஸ்–அப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. மேலும், மாணவிகள் மிகவும் மனவேதனை அடைந்து, பள்ளியில் நடக்கிற அத்துமீறல் பற்றி அவர்களின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி கல்வி அதிகாரிகளுக்கு அதிரடியாக உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராஜேந்திரன் பள்ளிக்கு சென்று ஆசிரியைகளிடம் விசாரணை நடத்தினார். பின்னர் கழிவறைகளை சுத்தம் செய்ய கூறியது யார்? என்பது குறித்து மாணவிகளிடமும் விசாரணை நடத்தினார். மாணவிகளை கட்டாயப்படுத்தி கழிவறைகளை சுத்தம் செய்தது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மூலம் விசாரணை நடத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார்.

பள்ளி மாணவிகள், கழிவறையை சுத்தம் செய்ய வைத்தது தொடர்பாக பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து நடவடிட்ககை எடுக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். இந்த நிலையில், திமுக எம்.பி. கனிமொழி, தனது பேஸ்புக் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திறமையான மாணவிகளை ஊக்குவித்து, கல்வியுடன் சுயமரியாதையையும் கற்றுத் தரவேண்டிய ஆசிரியர்கள் இப்படி மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொள்வது வேதனையளிப்பதாக கூறியுள்ளார். மேலும், கல்வி கற்கத்தான் குழந்தைகள் பள்ளிக்கு வருகிறார்கள். கழிப்பறை சுத்தம் செய்ய அல்ல. உடனடியாக தலைமை ஆசிரியர் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது ஒரு சம்பவம் மட்டுமே என்றும் தெரிவித்துள்ளார். வெளிவராமல் இன்னும் எத்தனையோ என்றும் கனிமொழி சந்தேகம் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்காமல் இருக்க கடினமான கண்காணிப்பு முறையை கல்வித்துறை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் இனி எந்த மாணவிக்கும் இதுபோல் நடக்காமல் இருக்க வேண்டும் என்றும் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். மேலும் தவறு செய்தவர்கள் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கனிமொழி கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

அன்புமணிக்கு அல்வா கொடுத்த அமித் ஷா.. டெல்லி பாஜக போட்ட பகீர் அரசியல் கணக்கு..!
24-ல் மதுரையில் சசிகலா புதிய கட்சி... சுக்கு நூறாக உடையும் அமமுக..! டிடி-வியின் காட்டுக் கதறல்..!