அனைத்து சாதியினர் அர்ச்சகர்..இந்துக்கள் விருப்பத்துக்கு குரல் கொடுப்பீர்களா.?பாஜகவுக்கு கனிமொழி கேள்விக்கனை!!

By Asianet TamilFirst Published Jul 28, 2020, 8:09 PM IST
Highlights

அனைத்து சாதியினரும் அர்ச்சராகலாம் திட்டத்துக்கு அனைத்து இந்துக்களின் பாதுகாவலன் என்று கூறும் பா.ஜ.க பெரும்பான்மை இந்துக்களின் விருப்பத்தை நிறைவேற்ற குரல் கொடுக்குமா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார் திமுக எம்.பி. கனிமொழி.

கந்த சஷ்டி விவகாரத்தில் கறுப்பர் கூட்டத்தின் பின்னணியில் திமுக இருப்பதாக பாஜக குற்றம்சாட்டிவருகிறது. இந்த விவகாரத்தை வைத்து திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என்று பாஜக பிரசாரம் செய்து வருகிறது. இந்நிலையில் திமுகவும் பாஜக பாணியில் இந்துக்களை வைத்தே கேள்வி எழுப்ப தொடங்கியிருக்கிறது. இட ஒதுக்கீடு விவகாரத்தில், “பெரும்பான்மை இந்துக்களை பாஜக படிக்க விடாமல் செய்கிறது” என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரடியாக குற்றம் சாட்டியிருந்தார்.


இந்நிலையில் திமுக மகளிரணி தலைவரும் எம்.பி.யுமான கனிமொழியும்  பாஜகவுக்கு எதிராக கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள  பதிவில், “அனைத்து சாதியினரும் தாங்கள் நம்பும் கடவுளை நெருங்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை பெரும்பான்மை இந்துக்களுக்காக தலைவர் கலைஞர் கொண்டு வந்தார். அனைத்து இந்துக்களின் பாதுகாவலன் என்று கூறும் பா.ஜ.க பெரும்பான்மை இந்துக்களின் விருப்பத்தை நிறைவேற்ற குரல் கொடுக்குமா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

click me!