நடிகர் ரஜினிகாந்த் இ-பாஸ் விவகாரம்... சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பரபரப்பு தகவல்..!

Published : Jul 28, 2020, 06:34 PM IST
நடிகர் ரஜினிகாந்த் இ-பாஸ் விவகாரம்... சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பரபரப்பு தகவல்..!

சுருக்கம்

நடிகர் ரஜினிகாந்த் இ- பாஸ் வாங்கித்தான் அவரது பண்ணை வீடான கேளம்பாக்கம் சென்றாரா? என்பதற்கு சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் விளக்கம் அளித்துள்ளார்.  

நடிகர் ரஜினிகாந்த் இ- பாஸ் வாங்கித்தான் அவரது பண்ணை வீடான கேளம்பாக்கம் சென்றாரா? என்பதற்கு சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன், நடிகர் ரஜினிகாந்த் லம்போர்கினி காரில் கேளம்பாக்கதிற்கு சென்று வந்தார். அவருடன் அவரின் மகள் சவுந்தர்யா, அவரின் கணவர் விசாகன் மற்றும் மகன் வேத் ஆகியோர் சென்றிருந்தனர். ரஜினி கார் ஒட்டிய அந்த புகைப்படம், சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதேசமயத்தில், ரஜினி இ பாஸ் எடுத்துதான் சென்றாரா என பலரும் கேள்வி எழுப்பிவந்தனர். இதன்காரணமாக, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், ரஜினிகாந்த் இ-பாஸ் வாங்கினாரா என்பது பற்றி ஆய்வு நடத்தி வருவதாக தெரிவித்தார்

 இந்நிலையில், ரஜினிகாந்த் இ -பாஸ் எடுத்துதான் சென்னையில் இருந்து கேளம்பாக்கம் சென்றார். செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்திடம் அவர் இ பாஸ் பெற்றது ஆய்வின் முடிவில் தெரியவந்தது. என அவர் தெரிவித்துள்ளார்.
 
PREV
click me!

Recommended Stories

விஜய் கை ஓங்கிவிடக்கூடாது..! வேகத்தைக் கூட்டும் பாஜக..! அண்ணாமலைக்கு முக்கியப் பொறுப்பு..!
ஓ.பி.எஸ் அப்செட்..! அமித் ஷா- விஜய்க்கு லாக்..! புதுக்கணக்கு போடும் இபிஎஸ்..!