அப்பலோவில் கவுதமசிகாமணி..! விரைந்து வந்த மு.க.ஸ்டாலின்..! பதறிப்போன விழுப்புரம்..!

By Selva KathirFirst Published Aug 19, 2021, 10:46 AM IST
Highlights

சென்னை கோட்டையில் இருந்த பொன்முடிக்கு திடீரென அவரது மகன் கவுதமசிகாமணிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து பதறி அடித்துக் கொண்டு பொன்முடி புறப்பட்டுள்ளார். அவரிடம் சென்னை கிரீம்ஸ் சாலை அப்பலோவிற்கு கவுதமசிகாமணி அழைத்துச் செல்வதாக வீட்டில் உள்ளவர்கள் கூறியுள்ளனர். 

கள்ளக்குறிச்சி தொகுதி எம்பியும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் மகனுமான கவுதமசிகாமணி திடீரென சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரை காண முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்றதால் விழுப்புரமே பதறிப்போனது.

சென்னை கோட்டையில் இருந்த பொன்முடிக்கு திடீரென அவரது மகன் கவுதமசிகாமணிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து பதறி அடித்துக் கொண்டு பொன்முடி புறப்பட்டுள்ளார். அவரிடம் சென்னை கிரீம்ஸ் சாலை அப்பலோவிற்கு கவுதமசிகாமணி அழைத்துச் செல்வதாக வீட்டில் உள்ளவர்கள் கூறியுள்ளனர். இதனை அடுத்து கோட்டையில் இருந்து பொன்முடியும் நேராக அப்பலோ மருத்துவமனைக்கு புறப்பட்டார். அவர் புறப்பட்டு வெளியே செல்லும் நேரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பட்டுள்ளார்.

அவர் என்ன விவரம் என்று கேட்க, பொன்முடியின் மகன் சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட உள்ள தகவல்களை கூறியுள்ளனர். இதனை அடுத்து பொன்முடியை அழைத்து பதற வேண்டாம் என்று கூறி அனுப்பி வைத்துவிட்டு ஸ்டாலின் புறப்பட்டுள்ளார். இதற்கிடையே நேற்று மாலை ஐந்து மணி அளவில் சென்னை அப்பலோவில் கவுதமசிகாமணி அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவல் விழுப்புரத்தில் காட்டுத் தீ போல பரவியுள்ளது. ஏராளமான திமுகவினர் சென்னை நோக்கி புறப்பட ஆரம்பித்தனர்.

திமுகவினர் சிலர் விழுப்புரத்தில் உள்ள பொன்முடி வீட்டிற்கு முன் திரண்டுள்ளனர். இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அப்பலோ மருத்துவனைக்கு புறப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதனால் கவுதமசிகாமணி உடலுக்கு ஏதோ தீவிர பிரச்சனை என விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் வதந்தி பரவ ஆரம்பித்தது. ஒரு சிலர் கடைகளை அடைக்க ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்பல்லோவில் இருந்து புறப்பட்டு தனது வீட்டிற்கு சென்றார். இதற்கிடையே கவுதமசிகாமணி ரத்த அழுத்த மாறுபாட்டின் காரணமாக மயக்கம் அடைந்ததாகவும் சிகிச்சைக்கு பிறகு அவர் நலமுடன் உள்ளதாகவும் அப்பல்லோ மருத்துவனை கூறியுள்ளது.

மேலும் அடுத்த சில மணி நேரங்களில் கவுதமசிகாமணி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி புறப்பட்டார். இதன் பிறகே விழுப்புரம், கள்ளக்குறிச்சி போன்ற பகுதிகளில் ஏற்பட்ட பதற்றம் தணிந்தது.

click me!