முதல்வர் இருக்கையில் ஸ்டாலினை அமர வைக்க வேண்டியது கடமை..!! பெரம்பலூரில் பொளந்துகட்டிய ஆ.ராசா...!!

Published : Feb 29, 2020, 05:06 PM IST
முதல்வர் இருக்கையில் ஸ்டாலினை அமர வைக்க வேண்டியது கடமை..!!  பெரம்பலூரில்  பொளந்துகட்டிய ஆ.ராசா...!!

சுருக்கம்

அதிமுக மீது மக்கள் வெறுப்பின் உச்சத்தில்  இருக்கிறார்கள் என்பதற்கு இதுவே சாட்சி என்றார்.    

அதிமுக அரசை மற்ற மக்கள் தயாராகி விட்டனர் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசா தெரிவித்துள்ளார் . எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முதல்வராக அமருவார் என்றும் அவர் கூறியுள்ளார். பெரம்பலூர் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது .  இதில் சிறப்பு விருந்தினராக கட்சியின் கொள்கை பரப்பு செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான ராசா கலந்து கொண்டார் அப்போது மேடையில் பேசிய அவர்

,  

கட்சி நிர்வாகிகள் ,  இளைஞரணி நிர்வாகிகள் ,  மற்றும் உறுப்பினர்கள் இணைந்து கட்சியை வளர்க்க பாடுபட வேண்டும் என்றார்.   தமிழகத்தில் நடந்துவரும் அதிமுக ஆட்சியை அகற்ற மக்கள் இப்போதே தயாராகிவிட்டனர் அதற்கு சாட்சியாக  தற்போது நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை  பார்க்க வேண்டும் என்றார் .  அதேபோல் கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் மக்கள் திமுகவுக்கு ஏகோபித்த ஆதரவை வழங்கியுள்ளனர் .  அதிமுக மீது மக்கள் வெறுப்பின் உச்சத்தில்  இருக்கிறார்கள் என்பதற்கு இதுவே சாட்சி என்றார். 

 

வெற்றி பெற வேண்டிய நிலையில் திமுகவினர் மேலும் விரைந்து சுறுசுறுப்புடன் செயலாற்றி எதிர்வரும்  நகர , பேரூர் ,  உள்ளாட்சித் தேர்தல்களிலும் ,  அதேபோல் சட்டசபை  தேர்தலிலும் ,  சிறப்பாக பணியாற்றிய அதிமுக அரசை அகற்ற  பாடுபடவேண்டும் என்றார் . அதுமட்டுமல்லாது எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுகவை அகற்றி திமுகவை வெற்றி பெற வைத்து திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களை முதலமைச்சராக அரியணையில் அமர வைக்க வேண்டியது நமது கடமை என்றார் அவர்.  

 

 

PREV
click me!

Recommended Stories

பாரதி..! சாதிவெறி ஐயா ஈவேரா..! அதிர வைக்கும் நாம் தமிழர் கருத்தரங்கம் போஸ்டர்
கரூரில் விஜய் கட்சியில் கூட்டமாக சேர்ந்த இஸ்லாமியர்கள்..! செந்தில் பாலாஜிக்கு டப் கொடுக்கும் மதியழகன்