கண்ணீர் விட்டு கதறி கதறி அழுத மு.க.ஸ்டாலின்... சோகத்தில் திமுக தொண்டர்கள்..!

Published : Feb 29, 2020, 03:11 PM IST
கண்ணீர் விட்டு கதறி கதறி அழுத மு.க.ஸ்டாலின்... சோகத்தில் திமுக தொண்டர்கள்..!

சுருக்கம்

மறைந்த எம்.எல்.ஏ காத்தவராயனின் உடலைப்பார்த்து மு.க.ஸ்டாலின் கண்ணீர் விட்டு கதறி அழுதது திமுக உடன்பிறப்புகளை சோகத்தில் ஆழ்த்தியது.   

மறைந்த எம்.எல்.ஏ காத்தவராயனின் உடலைப்பார்த்து மு.க.ஸ்டாலின் கண்ணீர் விட்டு கதறி அழுதது திமுக உடன்பிறப்புகளை சோகத்தில் ஆழ்த்தியது. 

கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற 18 தொகுதி இடைத்தேர்தலில் குடியாத்தம் தொகுதியில் திமுக சார்பில் நின்று வெற்றி பெற்ற காத்தவராயன் இதயநோய் காரணமாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று உடல் நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் நேற்று மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரின் இறுதிச்சடங்கு பேர்ணாம்பட்டில் இன்று நடைபெற்றது. அதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நேரில் அஞ்சலி செலுத்தினார்.  

பிப்ரவரி 27ந்தேதி திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏவுமான  கே.பி.பி.சாமி உடல்நலக்குறைவால் மரணமடைந்த நிலையில் மற்றொரு திமுக எம்எஏல் காத்தவராயன் உயிரிழந்துள்ளது திமுகவினருடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து இரண்டு எம்.எல்.ஏ.க்கள் மரமடைந்தது மு.க.ஸ்டாலினை பெரும் கவலைக்குள்ளாக்கியது. இதனால் திமுகவின் அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்ய உத்தரவிட்டார். நேரில் சென்ற மு.க.ஸ்டாலின் காத்தவராயனின் உடலைப்பார்த்து குலுங்கி கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதனை பார்த்த திமுக உடன்பிறப்புகளும் சோகத்தில் ஆழந்தனர். 

PREV
click me!

Recommended Stories

ஆபரேஷன் சிந்தூரின் முதல் நாளிலேயே பாகிஸ்தானிடம் அடி வாங்கியது இந்தியா..! காங்கிரஸ் தலைவர் சர்ச்சை பேச்சு..!
சமத்துவப் பாட்டன் பாரதி..! சாதிவெறி ஐயா ஈவேரா..! அதிர வைக்கும் நாம் தமிழர் கருத்தரங்கம் போஸ்டர்