தமிழகத்தில் மூன்றாக அதிகரித்த காலி தொகுதிகள்... திமுகவின் பலமும் 97 ஆக குறைந்தது... இடைத்தேர்தல் இருக்குமா?

By Asianet TamilFirst Published Jun 11, 2020, 8:40 AM IST
Highlights

கொரோனா வைரஸ் பரவல் இது எல்லாவற்றையும் காலி செய்தது. இப்போது சட்டப்பேரவையின் காலம் ஓராண்டுக்கும் குறைவாகக் குறைந்துவிட்டதால், இந்தத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் நடத்த தேவையில்லை என்று முடிவுக்கு தேர்தல் ஆணையம் வந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த இரு தொகுதிகளிலும்  இடைத்தேர்தலை நடத்துவதற்கான முயற்சிகள் எதுவும் தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் நேற்று காலமானார். இதனால், காலி தொகுதிகளின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. 
 

தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ள நிலையில், இந்தத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்படாது என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் திருவொற்றியூர், குடியாத்தம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகள் எம்.எல்.ஏ.க்கள் மறைவால் காலியாயின. இந்தத் தொகுதிகளின் திமுக எம்.எல்.ஏ.க்களான கே.பி.பி. சாமி, காத்தவராயன் முறையே பிப்ரவரி 27, 28 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். வழக்கமாக சட்டப்பேரவை உறுப்பினர்கள் இறந்தால், 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதி. இதன்படி ஆகஸ்ட் மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், ஓராண்டுக்குக் குறைவாக சட்டப்பேரவையின் காலம் இருந்தால், இடைத்தேர்தலை நடத்தாமல் விட்டுவிடவும் தேர்தல் ஆணையத்தால் முடியும்.


கடந்த 2005-ம் ஆண்டில் காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி தொகுதிகளின் இடைத்தேர்தல் சட்டப்பேரவை மே மாதத்தில் நடைபெற்றது. அதாவது, சட்டப்பேரவை காலம் முடிவதற்கு ஓராண்டு இருந்த நிலையில் நடத்தப்பட்டது. இதேபோல 2015-ம் ஆண்டில் ஜெயலலிதா முதல்வராக வசதியாக ஆர்.கே. நகர் தொகுதியில் உடனடியாகவும் மே மாதத்திலும் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த இடைத்தேர்தலும் சட்டப்பேரவையின் காலம் ஓராண்டுக்கு முன்பாக நடத்தப்பட்டது. எனவே திருவொற்றியூர், குடியாத்தம் ஆகிய தொகுதிகளில் மே மாதத்துக்குள் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.


ஆனால், கொரோனா வைரஸ் பரவல் இது எல்லாவற்றையும் காலி செய்தது. இப்போது சட்டப்பேரவையின் காலம் ஓராண்டுக்கும் குறைவாகக் குறைந்துவிட்டதால், இந்தத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் நடத்த தேவையில்லை என்று முடிவுக்கு தேர்தல் ஆணையம் வந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த இரு தொகுதிகளிலும்  இடைத்தேர்தலை நடத்துவதற்கான முயற்சிகள் எதுவும் தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் நேற்று காலமானார்.

இதனால், காலி தொகுதிகளின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. தற்போது சபையின் மொத்த எண்ணிக்கை 231 ஆகக் குறைந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் திமுக எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 100 ஆக இருந்தது. தற்போது அது 97 ஆகவும் குறைந்துள்ளது.  

click me!