ஸ்டாலின் திடீர் உத்தரவு... சென்னை விரையும் திமுக எம்எல்ஏக்கள்!

Published : Feb 07, 2019, 01:28 PM ISTUpdated : Feb 07, 2019, 01:32 PM IST
ஸ்டாலின் திடீர் உத்தரவு... சென்னை விரையும் திமுக எம்எல்ஏக்கள்!

சுருக்கம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை மாலை 5 மணிக்கு மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை மாலை 5 மணிக்கு மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.  

தமிழக சட்டப்பேரவையில் நாளை நிதியமைச்சர் ஓபிஎஸ் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். அதைத்தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் வருகிற பிப்ரவரி 11-ம் தேதி முதல் 16-ம் வரை 5 நாட்கள் நடைபெறவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் வர உள்ளதால் பல்வேறு அறிவிப்புகள் மற்றும் சலுகைகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழக பட்ஜெட் மற்றும் மக்களவை தேர்தல், இடைத்தேர்தல் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் அனைத்து எம்எல்ஏக்களும் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!